பெண்கள் லெஸ்பியன் உறவை நாடி செல்வதற்கான காரணம்…!!

Read Time:8 Minute, 44 Second

penn1-310x150இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது.

இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்படுவது, இயல்பானது.

மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது.

இன்றைய காலகட்டங்களில் 2 ஆண்கள் ஒருவருக்கொருவர் இணைவதும், பெண்ணும் பெண்ணும் இணையும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பெ

போய்சே பல்கலைக்கழகத்தின் உளவியல்துறை பேராசியர் எலிசபெத் மோர்கன் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பிற பெண்களின் மீது ஈடுபாடு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 45 சதவிகித பெண்கள் பிற பெண்களை முத்தமிட்டுள்ளனராம். 50 சதவிகித பெண்கள் பிற பெண்களுடன் உறவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

பெண்கள் லெஸ்பியன்´ உறவை நாடிச் செல்வதற்கான காரணம்

பெண்ணிடம் பெண் உறவில் ஈடுபடும் போது அவள் அனுபவிக்கும் இன்பம் கூடுதல் சுகத்தை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இயற்கையாக ஒரு பெண் ஆணுடன் இணையும் போது ஆண் தனது பெண் துணையை சரியான அளவில் உறவில் திளைக்க தயார் படுத்துவதில்லையாம்.

மாறாக தான் இன்பம் பெறவே மனைவியை ஆண்கள் பயன்படுத்திக்கொள்கின்றனராம்.

ஆனால் லெஸ்பியன் உறவிலோ பெண்களுக்கு இடையேயான உறவில் இரு பெண்களுமே சரி சமமாக சுகத்தை பெற்று இன்பக் கடலில் மூழ்கி திளைக்கின்றனராம்.

உறவின் போது ஆண் ஒரு பெண்ணை கையாளும் போது முரட்டுத்தனமாக இருக்கும். ஆனால் லெஸ்பியனிலோ ஒரு பெண் மற்றொரு பெண்ணை மிகவும் மென்மையாக கையாளுகின்றனர். இதுவும் கூட பெண்ணை பெண் விரும்ப காரணமாகிவிடுகிறது.

ஆண்களின் ஓரினச்சேர்க்கையான ஹோமோ செக்ஸில் எய்ட்ஸ் நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் லெஸ்பியனில் எய்ட்ஸ் வரும் வாய்ப்பு குறைவு என்கின்றனர்.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெளிநாடுகளில் உரிய அங்கீகாரம் உள்ளது. மாறாக இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் லெஸ்பியன் உறவு பற்றி வெளிப்படையாக எதுவும் தெரியவருவதில்லை.

இருப்பினும் இயற்கைக்கு மாறான இத்தகைய உறவுமுறைகளில் சிக்கிக்கொள்ளாமல் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

ஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது.

திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.

திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….?

* தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாத பட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள்.

அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிக மாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.

* திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறை யக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம்.

* திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு க0ளும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள்.

* வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெளியு லகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம்.

தவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அது போகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.

* ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.

* தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர் .

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி… மழலை என்றாலே அழகு தானே…!! வீடியோ
Next post ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்த கௌரவம்…!!