​மாவீரன் கிட்டு நிறைய தேசிய விருதுகளை பெற்று தரும்: பார்த்திபன் நம்பிக்கை..!!

Read Time:3 Minute, 1 Second

201610011948259828_vishnu-vishal-s-maaveeran-kittu-movie-teaser-revealed_secvpf‘வெண்ணிலா கபடி குழு’, ‘ஜீவா’ படங்களுக்குப் பின் சுசீந்திரன்-விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘மாவீரன் கிட்டு’. இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியில் இன்று மாலை நடைபெற்றது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் சமுத்திரகனி வெளியிட படத்தின் டீசரை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டார். விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில் ” ‘அழகர் சாமியின் குதிரை’ திரைப்படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல் ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்துக்கும் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

விழாவில் நாயகன் விஷ்ணு விஷால் பேசியபோது “நான் இப்படத்தின் மூலம் இயக்குநர் சுசீந்திரன் அவர்களுடன் மூன்றாவது படத்தில் இணைகிறேன். இப்படம் நிச்சயம் உங்கள் மனதை தொடும் ஒரு படமாக இருக்கும்’’ என்றார்.

இயக்குநர் சமுத்திரகனி பேசியது “இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது எனக்கு மாபெரும் போராளி மாவீரன் திலீபன் அவர்கள்தான் நினைவுக்கு வருகிறார். இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தின் மூலம் அழுத்தமான ஒரு பதிவை தமிழ் சினிமாவுக்கு வழங்குவார் என்று நினைக்கிறேன்” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது , ‘‘இப்படத்தின் டீசரை பார்க்கும்போது சமூகத்துக்கு தேவையான முக்கியமான ஒரு படைப்பை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. இப்படத்தை பார்க்கும்போது நாயகன் ஏதோ ஒரு முக்கிய சமூக பிரச்சனைக்காக போராடுவதுபோல் தோன்றுகிறது” என்றார்.

விழாவில் இயக்குநர் நடிகர் பார்த்திபன் பேசுகையில் ” ‘ஆயிரத்தில் ஒருவன்’ , ‘அழகி’ திரைப்படத்தைப் போன்று இப்படம் எனக்கு கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கி தரும். ஏனென்றால் என்னுடைய கதாபாத்திரம் அப்படி. ‘ஹவுஸ்புல்’ திரைப்படத்துக்கு பின் இப்படத்துக்காக நான் நிறைய விருதுகளை வாங்குவேன் என நம்புகிறேன்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரை அருகே கார்கள் மோதல்: குழந்தை உள்பட நடிகரின் மகன், மகள் 4 பேர் பலி…!!
Next post நீரிழிவு நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா…!!