சர்வதேச பாடசாலைகளை ஒழுங்கமைக்கும் திட்டம் விரைவில்…!!

Read Time:4 Minute, 54 Second

akila_viraj_kariyawasamஉள்நாட்டில் இயங்கி வருகின்ற அனைத்து சர்­வ­தேச பாட­சா­லை­க­ளையும் ஒழுங்­க­மைப்­ப­தற்­கான திட்­ட­மொன்றை விரைவில் முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

பயிற்­றப்­பட்ட சிறந்த ஆசி­ரி­யர்­களை நிய­மிப்­ப­தற்கும் விரைந்து நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தா­கவும் அமைச்சர் அகி­ல­விராஜ் குறிப்­பிட்டார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டி வீதியிலுள்ள பாது­காப்பு பாட­சா­லையின் பத்தாவது வருட பூர்த்­தியை முன்­னிட்டு இடம்­பெற்ற விசேட நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

கல்­வி­ய­மைச்சு தொடர்ந்­தேர்ச்சி­யான அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. ஆசி­யா­வி­லேயே நமது நாட்டின் கல்­வித்­துறை மிகவும் பலம் ­வாய்ந்­த­தாக காணப்­ப­டு­கின்­றது. அதற்­காக நாம் வர­லாற்று காலம் தொட்டு கடும் பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்­டுள்ளோம். நமது ஆசி­ரியர் வளம், பாட­சாலை அபி­வி­ருத்தி போன்­றன ஏனைய நாடு­க­ளுக்கு உதா­ர­ண­மாக உள்­ளன. இருந்த போதிலும் நவீன தொழில்­நுட்ப மற்றும் விஞ்­ஞான கண்­டு­பிடிப்­பு­க­ளுக்கு ஏற்ற வகையில் பாட­சாலைக்­கல்­வியை தயார்­ப்ப­டுத்த வேண்டும்.

அதற்­கென ஆசி­ரி­யர்கள் விசே­ட­மாக பயிற்­று­விக்­கப்­ப­டுவர். நம் நாட்டின் பாது­காப்புப் படை­யினர் மிகவும் பலம் ­வாய்ந்­த­வர்கள். எனவே பாது­காப்புப் படை பாட­சாலை­க­ளையும் வளர்ச்சிப் பாதையில் கொண்­டு­செல்ல வேண்டும். அதற்­கென விசேட நிதி­யு­த­விகள் வழங்­கி வரு­கின்றோம்.

பாட­சா­லை­களை சர்­வ­தேச தரத்தில் அபி­வி­ருத்தி அடையச் செய்­வ­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள வேண்டும். அத்­தோடு நாட்­டி­லுள்ள அனைத்து சர்­வ­தேச பாட­சா­லை­க­ளையும் முறை­யாக ஒழுங்­கு­ப­டுத்­த­லுக்கு உட்­ப­டுத்­த­வுள்ளோம். சர்­வ­தேச பாட­சா­லை­களில் உள்ள வளங்­களைப் போன்றே அனைத்து வளங்­க­ளையும் தேசிய பாட­சா­லை­க­ளுக்கும் வழங்க தீர்­மா­னித்­துள்ளோம்.

அத்­தோடு எதிர்­வரும் 6ஆம் திகதி சர்­வ­தேச ஆசி­ரியர் தினம் கொண்­டா­டப்­பட­வுள்­ளது. இத்­தி­னத்­தி­லா­வது நாம் ஆசி­ரி­யர்­களை நினை­வு­ப­டுத்த வேண்டும். இதற்­கென தொலை­பேசி ஊடா­க­வேனும் ஆசி­ரி­யர்­களை வாழ்த்த வேண்டும். சர்­வ­தேச ஆசி­ரியர் தினத்தில் வாழ்த்­து­ரைப்­பது மிகவும் அவ­சி­ய­மா­னது. கல்விக் கண்ணை திறந்த ஆசி­ரியர், தாய் தந்­தை­ய­ருக்கு பரிசுப் பொருட்கள் வழங்­கா­விட்­டாலும் பர­வா­யில்லை. தொலை­பேசி அழைப்பின் ஊடா­க­வேனும் அனைத்து மக்­களும் ஆசி­ரிய பெருந்­த­கை­களை வாழ்த்த வேண்டும். தற்­பொ­ழுது எவ்­வ­ளவு உய­ரத்தில் இருந்­தாலும் சிறந்த நிலையில் இருந்­தாலும் ஆசி­ரி­யர்கள் வழங்­கிய ஆலோ­ச­னைகள், அறி­வு­றுத்­தல்கள், வழி­காட்­டல்­களை மறந்துவிடக் கூடாது.

தற்போது ஓய்வு பெற்றுக்கொண்டுள்ள ஆசிரியர்களின் தொலைபேசி இலக்கங்களை கண்டறிந்து அவர்களுக்கு தொலைபேசி ஊடாகவேனும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள வேண்டுகோள் விடுக்கின்றேன். நாம் ஆசிரியர்களை மதித்தால் மட்டுமே உயர முடியும் என்பதை நம்புகின்றேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியா செல்கிறார் பிரதமர்…!!
Next post தாம்பரம் அருகே தி.மு.க. கவுன்சிலர் கொலையில் உறவினர்களிடம் விசாரணை…!!