தாத்ரி கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி டெல்லி ஆஸ்பத்திரியில் மரணம்..!!

Read Time:2 Minute, 47 Second

201610050832112418_dadri-lynching-case-one-of-the-accused-dies-at-delhi_secvpfஉத்தரபிரதேசம் மாநிலம், தாத்ரி பகுதிக்கு உட்பட்ட பிஸாடா கிராமத்தில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டதாக முகமது அக்லாக்(51) என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்தனர். ரவி என்ற 22 வயது வாலிபர் முக்கிய குற்றவாளியாக பிடிபட்டார். கடந்த ஓராண்டாக இவர், உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கவுதம் புத்நகர் மாவட்ட சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை உடல் நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் ரவி மரணமடைந்தார்.

முன்னதாக, சிறுநீரக பாதிப்பால் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெற்றுவந்த ரவியின் உடல்நிலை மோசமானதால் அங்கிருந்து நேற்று பகல் 12 மணியளவில் டெல்லியில் உள்ள லோக்நாயக் ஜெய்பிரகாஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக, ரவிக்கு சிகிச்சை அளித்த டெல்லி டாக்டர்கள் கூறுகையில், ‘ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவுடன் மிக மோசமான நிலையில் ரவி இந்த மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். சிறுநீரகம் செயலிழந்ததாலும், சுவாசக் கோளாறாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்’ என்று தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு ராபினின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். சிறையில் போலீசார் அடித்து துன்புறுத்தியதில் ராபின் இறந்ததாகவும், ராபின் சாவுக்கு ஜெயிலர்தான் காரணம் என்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எங்காவது மீன் விவசாயம் செய்யுமா?… இங்கு பாருங்க அந்த கண்கொள்ளாக் காட்சியை…!! வீடியோ
Next post தீராத வயிற்றுவலியை தீர்க்கும் அருமருந்து…!!