மாட்டு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் உயிரிழப்பு…!!
Read Time:1 Minute, 8 Second
மூதூர் – இரால்குழி பாலத்தருகில் மாட்டு வண்டியும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை (03) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த சாஹல் ஹமீது அனீஸ் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating