தமிழகத்தில் பயங்கரம்… கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவன் கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்பு!

Read Time:3 Minute, 3 Second

daily_news_4782634973527“தமிழகம், ஊத்துக்கோட்டை , பெரியபாளையம் அருகே கை, கால்களை கட்டியும் கழுத்தை திருகியும் 3 வயது சிறுவனை கொடூர கொலை செய்து கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக அமைக்கப்பட்ட உறையில் வீசிய சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை தொடர்பாக உறவினர் உட்பட 3 பேரை பிடித்து பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் (35). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி மேகலா (30). இவர்களது குழந்தைகள் சுரேகா (11), சுமிதா (5), ஹேமந்த் (3). நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் வீட்டில் தூங்கினர்.

நள்ளிரவு முருகன் எழுந்து பார்த்தபோது ஹேமந்த்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடினர்.

குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு முழுவதும் தேகை்கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான இடத்தில் தோண்டப்பட்ட கழிவுநீர் தொட்டியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஹேமந்த் இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர்.

பெரியபாளையம்ரு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்ஐ வெங்கடேசன் ஆகியோர் விசாரணை மேற்கொண்ட நிலையில், சிறுவனின் கழுத்தை திருகி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சந்தேகத்தின்பேரில் முருகனின் உறவினர் உட்பட 3 பேரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சொத்துக்காக சிறுவன் கொலை செய்யப்பட்டானா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டானா என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

3 வயது சிறுவன் கழுத்தை திருகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரியபாளையம் அருகே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் இனம்தெரியாதோரால் துப்பாக்கி சூடு சம்பவம்..!!
Next post ஆண், பெண் உறவில் வயது வித்தியாசம் அவசியமா?