ஜெயலலிதாவின் இந்த நிலைக்கு ராம்குமார் காரணமா?-மீண்டும் தமிழகத்தை அதிரவைத்துள்ள தமிழச்சி..!!

Read Time:6 Minute, 21 Second

1475241628-4525தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஏற்கனவே தவறான தகவல் ஒன்றை பிரான்சில் இருக்கும் தமிழச்சி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதனால் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக புகார் அளிக்கப்பட்டு தமிழகத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ர்சைக்குறிய தகவல் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “ஜெயலலிதாவின் நுரையிரலில் இருப்பது தொற்று கிருமி இல்லை.
என்ற செலுத்தப்பட்ட கிருமி. சில நாட்களாக ‘ஜெயலலிதா அப்பலோவில் தலைமறைவு’ என்று எழுத ஆரம்பித்த பிறகு இன்று வேறு விதமான தகவலை அப்பலோ கூறுகிறது. இந்த உண்மையை வரவழிப்பதற்கு தான் தலைமறைவு கதை.

செப்டம்பர் 22 அன்று இரவு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ‘சாதாரண காய்ச்சல் இரண்டு நாட்களில் வந்துவிடுவார்’ என்று அறிவித்த அப்பலோ இன்று ‘முதல்வர் ஜெயலலிதா நீண்டநாள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்’ என்று கூறுகிறது. இதுவும் பொய். மக்களை சமாதானப்படுத்துவதற்கான அறிக்கை.

முதன்முறையாக எனக்கு கிடைத்த தகவல்படி ஜெயலலிதா உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டன. கோமா நிலையில் உள்ளார். மூளைச்சாவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதற்கு பிறகு சில தினங்களில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பியல் வரவழைக்கப்படுகிறார். இவர் உறுப்புகள் செயலிழப்பு, நோய்த்தொற்று, மூளைச்ச்சாவு இவற்றில் வல்லுனர். இதனோடு Sepsis நோய்க்கு ஸ்பெஷலிஸ்ட். இவரை ஏன் ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதிக்க அழைக்க வேண்டும்? அப்படியானால் ஜெயலலிதா உடல்நிலை மேற்குறிப்பிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதா?

இவை எல்லாவற்றையும் விட எந்த கட்டத்தில் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது அவரருகே யார் இருந்தார்கள்? ராம்குமார் செப்டம்பர் 19 இல் சிறைக்குள் கொல்லப்படுகிறார். அதற்கு பிறகு செப்டம்பர் 20, 21 இல் யார் ஜெயலலிதாவுடன் நேரடியாகவோ தொலைபேசி வழியாகவோ தொடர்புக்கு வந்தார்கள்? அவர்கள் ஜெயலலிதாவிடம் என்ன பேசினார்கள்? டெல்லியில் இருந்து தொலைபேசி வந்ததாகவும் அதிலிருந்து ஜெயலலிதா மன உளைச்சலில் இருந்ததாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது

சுவாதி படுகொலை பின்னணியில் இயங்கும் அரசியல் எது என்று ஜெயலலிதாவுக்கு தெரிந்தே இருந்தது. ஒப்புக்கு ராம்குமார் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியும். ஆனால் சிறைக்குள் ராம்குமார் கொல்லப்படுவதில் இணக்கமாக ஜெயலலிதா இருந்திருக்க மாட்டார் என வைத்துக் கொள்வோம். அவரை மீறி ஆர்.எஸ்.எஸ் திட்டம் நடத்தப்பட்டு விடுகிறது.

தமிழ்நாட்டு அரசியலுக்குள் ராம்குமார் சிறைக்குள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தன் அரசியலுக்கு நெருக்கடி ஏற்படுத்தி விடுமோ என்ற பதட்டம். இன்னொரு புறம் தன் அதிகாரம் பறிக்கப்படுகிறதோ என்ற எண்ணம். ஊழல் வழக்கு விசாரணைகளை மையப்படுத்தி தொடர்ந்து மிரட்டலுக்குட்பட்டு அதிலும் வீம்பாக ஜெயலலிதா இருந்திருந்தால் அடுத்தக் கட்டம் எப்படி நகர்ந்திருக்கக் கூடும்?

சென்னை முக்கிய காவல்துறையினருடன் அன்று இரவு மீட்டிங்கில் இருந்திருக்கிறார் ஜெயலலிதா. உடன் சசிகலா. அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் உடலில் ஏன் Sepsis கிருமி ஜெயலலிதாவுக்கு செலுத்தப்பட்டிருக்கலாம் தானே?

இத்தனை சந்தேகம் ஏன்? ஜெயலலிதா 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்தும் தமிழக கவர்னர், மந்திரிகள், எம்.பிக்கள், அரசு அதிகாரிகள் உட்பட யாருமே ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லையே! ஏன்?

சசிகலா மட்டுமே ஜெயலலிதா அறைக்குள் சென்று வருகிறார். இந்தளவுக்கு சசிகலாவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? சசிகலா யாருக்காக வேலை செய்கிறார்?
இந்த சந்தேகம் ஏன் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படவில்லை?”

இவ்வாறு தமிழச்சி அந்த பதிவில் கூறியுள்ளார். ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. எங்கோ பிரான்சில் இருந்துகொண்டு தனது யூகத்தின் அடிப்படையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் சமூக வலைதளத்தில் பதிவிட்டு தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவது தமிழச்சிக்கு வாடிக்கையாகிவிட்டது என பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண், பெண் உறவில் வயது வித்தியாசம் அவசியமா?
Next post காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரம்..!!