பெற்றோரிடம் இருந்து பிரிக்க முயலும் மனைவியை விவாகரத்து செய்ய புதிய சட்டம்..!!

Read Time:2 Minute, 14 Second

live-in-relatio30913கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதியின் விவகாரத்து மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. இந்த வழக்கில் மனுதாரரை அவரது மனைவி பெற்றோரை பிரிந்து வருமாறும் இல்லை என்றால் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக அச்சுறுத்தியிருக்கிறார். ஒருமுறை தற்கொலைக்கு முயலும்போது கடைசி நொடியில் காப்பாற்றப்பட்டிருக்கிறார். இத்தகைய சூழல் கணவனுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு ‘வயது முதிர்ந்த பெற்றோரிடம் இருந்து பிரிக்க முயலும் மனைவியை இந்து மதத்தை பின்பற்றும் கணவர் விவாகரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டு என்று தெரிவித்தனர். இந்திய நாட்டில் இந்து மதத்தை பின்பற்றும் ஒரு ஆண் அவரது தாய் தந்தையைவிட்டு பிரிந்து வாழ்வது என்பது கலாச்சாரத்துக்கு எதிரானது. அதுவும் பெற்றோர் சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கும்போது மகன் அவர்களை பிரிந்து செல்லவே கூடாது.

பெற்றோரால் சீராட்டி கல்வி கற்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஆணுக்கு முதுமையில் அவர்களை பேணும் பொறுப்பும், கடமையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் மனைவி கணவரின் குடும்பத்தினருடன் வாழவேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உரிய வலுவான காரணம் இல்லாமல் கணவர் பெற்றோரைப் பிரிந்து தன்னுடன் தனிக்குடித்தனத்துக்கு வரவேண்டும் என மனைவி எதிர்பார்க்கக் கூடாது’ என கருத்து தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேத்யூ புயல் கோரத்தாண்டவம்: ஹைதியில் உயிரிழப்பு 478 ஆக அதிகரிப்பு…!!
Next post மாயமான மலேசிய விமானத்தின் பாகம் மொரீசியசில் கண்டுபிடிப்பு..!!