By 8 October 2016 0 Comments

சூப்பரான ஹனிமூன் வேண்டுமா?

625-89-560-350-160-300-053-800-160-160-90திருமணத்திற்கு பின்னர் தம்பதியினர் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்வதற்கு கண்டிப்பாக ஹனிமூன் செல்ல வேண்டும்.

நல்லறமாய் இல்லறம் அமைவதற்கு, முதல் படி தான் ஹனிமூன் என்று கூட சொல்லலாம். பல்வேறு இனிமையான நினைவுகளை உள்ளடக்கியவைகளாக ஹனிமூன் இருக்கவேண்டுமெனில், உங்களை நீங்கள் கொஞ்சம் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் துணையை பற்றி ஓரளவு தெரிந்துவைத்துக்கொண்டால் போதும். மீதியை தெரிந்துகொள்ள இந்த ஹனிமூனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதே நேரத்தில் இருவரும் தாங்கள் ஹனிமூன் இங்கு தான் செல்ல வேண்டும், இந்த இடம் தான் அழகாக இருக்கும் என தங்களது எண்ணங்களை அதிகமாக பகிர்ந்து கொள்ளவேண்டும்.

நிச்சயிக்கப்பட்டதிலிருந்தே உங்களது துணைக்கு பிடித்தவாறே நடந்து கொள்ளுங்கள். அதாவது, அழகான உடையணிதல், துணையை கவரும் வகையிலான செயல்களில் ஈடுபடுதல் என புதிய முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

மேலும், துணைக்கு மிகவும் பிடித்த ஒரு பொருளை தங்களது ஹனிமூன் பயணத்தின் போது சர்பிரைஸ் கிப்ட் ஆக மனைவிக்கு கொடுங்கள்.

படுக்கையறையை மெழுகுவர்த்தி வெளிச்சம், குறைந்த சத்தத்தில் காதல் கானங்கள், மனம் கமழும் நறுமணம் என கவர்ச்சிகரமாக அலங்கரித்து அசத்துங்கள்.

ஒருவரின் காதலை மற்றொருவர் புரிந்து கொள்ளவும் இந்த தனிமை முக்கியம். எனவே ஹனிமூன் பயணம் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத காதல் அனுபவமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D



Post a Comment

Protected by WP Anti Spam