துப்பறிவாளன் அப்டேட்: விஷாலுடன் இணைந்த கமல் மகள்..!!

Read Time:1 Minute, 52 Second

201610081738351542_thupparivaalan-update-akshara-haasan-join-hands-with-vishal_secvpfவிஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கமல் மகள் அக்ஷரா ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது விஷால் கதாநாயகனாக நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கி வருகிறார்.

விஷால் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பாக்யராஜ், பிரசன்னா மற்றும் வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ராகுல் பிரீத் சிங் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆரோல் கரோலி இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அக்ஷரா ஹாசன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக நடிகர் விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். முன்னதாக ‘பூஜை’ படத்தில் அக்ஷராவின் சகோதரியும், நடிகையுமான சுருதிஹாசனுடன் விஷால் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஞாபகசக்தி குறைவினால் அவஸ்தையா? அப்போ கிரீன் ஆப்பிள் சாப்பிடுங்க…!!
Next post ராட்சத தவளை வேட்டையாடும் திரில் காட்சி…!! வீடியோ