எருவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பலி -இளைஞன் படுகாயம்…!!

Read Time:1 Minute, 29 Second

downloadமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் கணேசமூர்த்தி(70வயது)என்பவர் உயிரிழந்துள்ளதுடன் இன்று (09) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, களுவாஞ்சிகுடியை சேர்ந்த வடிவேல் கிருஸாந்த்(18வயது)என்னும் இளைஞன் படுகாயமடைந்துள்ள நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எருவில் பழைய பொலிஸ் நிலையம் வீதியில் சென்ற முதியவரின் மீது வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் மீண்டும் தலைதூக்கிய வாள்வெட்டு கலாச்சாரம்: குடும்பஸ்தர் பரிதாபகரமாக பலி…!!
Next post மாரடைப்பு வந்தால் உடன் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்…!!