68 நாள் உண்ணாவிரதம்! 13 வயது சிறுமி மரணம்! சாமியாரை நம்பி மகளை இழந்த தம்பதி…!!

Read Time:7 Minute, 35 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2இந்தியா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், சமண மத வழக்கப்படி, 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த, 13 வயது சிறுமி, மாரடைப்பால் மரணமடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில், எட்டாம் வகுப்பு படித்து வந்தவர், 13 வயது சிறுமி ஆராதனா. இவரது குடும்பத்தினர், செகந்திராபாத்தில் நகைத்தொழில் செய்து வருகின்றனர்.

ஆராதனா, சமண மத வழக்கப்படி, ஹைதராபாத் நகரில், 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் முடித்த போது மிகவும் சோர்வாக காணப்பட்ட அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இரண்டு நாட்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார்.

ஆராதனாவின் இறுதி ஊர்வலத்தில், சமண மதத்தைச் சேர்ந்த, 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆராதனாவின் இறுதி ஊர்வலம், ‘ஷோபா யாத்திரை’ என்ற பெயரில் விமரிசையாக நடந்தது. அவரை, ‘தவ வலிமை பெற்ற பாலகி’ என, ஊர்வலத்தில் பங்கேற்றோர் புகழ்ந்தனர்.

இருப்பினும், சமண மதத்தைச் சேர்ந்த பலர், சிறுமியை உண்ணாவிரதம் இருக்க அனுமதித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சமண மதத்தைச் சேர்ந்த, லதா ஜெயின் என்பவர் கூறுகையில்,

வயதான பெரியவர்கள், உணவு, நீரின்றி கடும் தவத்தில் ஈடுபடுவது வழக்கம். அவர்கள், சமண மத வழக்கப்படி உயர்ந்த நிலையில் வைத்து போற்றப்படுவர்.

ஆனால், ஆராதனா, 13 வயதே ஆன சிறுமி; அவரை, உண்ணாவிரதம் இருக்க அனுமதித்ததை ஏற்க முடியாது என்றார்.

சிறுமி ஆராதனா, 68 நாட்கள் உண்ணாவிரதத்தை முடித்த போது, ‘பாரானா’ என்ற பெயரில், பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில், தெலுங்கானா மாநில அமைச்சர் பத்மராவ் கவுட், தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

ஆராதனா மரணமடைந்துள்ள நிலையில், குழந்தைகள் உரிமை ஆர்வலர் சாந்தா சின்ஹா, ஆராதனா மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில், குழந்தைகள் நல கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

புதிய இணைப்பு

சாமியாரை நம்பி மகளைப் பறிகொடுத்த ஜெயின் தம்பதி!

துள்ளிக்குதித்து விளையாட வேண்டிய பதின்ம வயதில், 68 நாட்கள் உண்ணாநோன்பிருந்து, குடும்பத்திற்காக உயிரை விட்டிருக்கிறாள் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி.

13 வயதான ஆராதனா, ஹைதராபாத்தைச் சேர்ந்த லட்சுமிசந்த் சன்சார்டியா என்ற ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவரின் செல்ல மகள். தான் செய்து வந்த ஜூவல்லரி தொழிலில் லட்சுமி சந்த்துக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொழில் நஷ்டத்தில் இருந்து மீண்டு, தனது குடும்பம் மீண்டும் வசதி வாய்ப்புகளை பெறுவது எப்போது? தன் குடும்பம் இழந்த சொத்துகளை மீண்டும் அடைந்து, செல்வ செழிப்புடன் திகழ என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான ஆலோசனையைப் பெற, சென்னையைச் சேர்ந்த சாமியார் ஒருவரை அணுகியுள்ளார் லட்சுமிசந்த்.

வாய்க்கு வந்ததை எல்லாம் பரிகாரமாகச் சொல்லக்கூடிய சாமியாரான அவர், லட்சுமிகாந்தின் குடும்பம் மீண்டும் சுபிட்சம் பெற வேண்டுமானால், ‘சதுர்மாஸ்’ என்ற தொடர் உண்ணாநோன்பை லட்சுமிசந்தின் பிஞ்சு மகள் ஆராதனா மேற்கொள்ள வேண்டும் என்று உளறி வைத்துள்ளார்.

சாமியாரின் போலியான ஆலோசனையை அப்படியே ஏற்றுக்கொண்ட லட்சுமிசந்த், தனது மகள் ஆராதனாவை உண்ணாநோன்பிருக்கச் செய்துள்ளார்.

சதுர்மாஸ் உண்ணா நோன்பு இருந்தால், தனது குடும்பம் வறுமையில் இருந்து மீண்டு, சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் சிறுமியும் உண்ணாநோன்பைத் தொடங்கி இருந்துள்ளார்.

அக்டோபர் 3-ம் தேதி ஆராதனாவின் 10 வார கால உண்ணாநோன்பு நிறைவடைந்தது. இதனை லட்சுமிசந்தின் குடும்பத்தின் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டத்தில், தெலங்கானா மாநில அமைச்சர் பத்ம ராவ் பங்கேற்றது தான் அதிர்ச்சியளிக்கும் செய்தி. லட்சுமி சந்த் குடும்பத்தினரின் இந்த மகிழ்ச்சி அடுத்த சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

68 நாட்களைக் கடந்து ஆராதனா உண்ணாநோன்பு இருந்ததால், அவரது சிறுகுடல் சுருங்கி, உடலில் நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டது. சிறுகுடல் பாதிப்பைத் தொடர்ந்து, இரண்டு சிறுநீரகங்களும் செயல்படாமல் போயின.

இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஆராதனா நீண்டநாட்கள் உணவு எடுத்துக்கொள்ளாததால் ஏற்பட்ட, பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.

தன் குடும்பத்தின் மேன்மைக்கு என்று போலியாக சாமியார் சொன்னதை ஏற்று, 68 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து உயிரிழந்த சிறுமிக்கு ஆதரவாக, குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் களமிறங்கியுள்ளது.

ஆராதனாவின் பெற்றோருக்கு எதிராக, குழந்தைகள் உரிமைகள் சங்கம், போலீசில் புகார் அளித்துள்ளது. சீராட்டிப் பாராட்டி வளர்க்க வேண்டிய மகளை தனது மூடநம்பிக்கையால் பலி கொடுத்து விட்டார் ஆராதனாவின் தந்தை லட்சுமிசந்த்.

தொழிலில் அடைந்த நஷ்டத்தை விடவும், மகளை இழந்த சோகமே அவரது வாழ்நாள் முழுவதும் மேலோங்கி நிற்கும். அவர் எத்தனை கோடி இனி சம்பாதித்தாலும், மகள் ஆராதனா மீண்டும் கிடைப்பாளா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாரடைப்பு வந்தால் உடன் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்…!!
Next post கொழும்பின் பிரபல இரவுக் கேளிக்கை அகத்தில் அடிதடி…!!