நீர்விநியோகத்தை 18 மணிநேரத்துக்கு கட்டுப்படுத்த தீர்மானம்…!!

Read Time:2 Minute, 18 Second

smith-flow-control-water-applicationsநாட்டில் நிலவும்கடுமையான வரட்சியான காலநிலை காரணமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதன்பிரகாரம் அவ்விரண்டு மாகாணங்களில் மாத்திரம் 2 இலட்சத்து 80 பேர் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வரட்சியான காலநிலை அதிஉச்சநிலையை அடைந்துள்ளமையினால் நாடு பூராகவும் இதுவரைக்கும் 5 இலட்சத்து 42 ஆயிரத்து 455 பேர் குடிநீர்தட்டுப்பாட்டினால் தத்தளித்து வருகின்றனர்.

இதேவேளை வரட்சியான காலநிலை காரணமாக நாடுபூராகவும் குடிநீர் விநியோகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்பிரகாரம் ஒரு நாளைக்கு 18 மணிநேரத்திற்கு நீர்விநியோகத்தை மட்டுப்படுத்த நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புசபை தீர்மானித்துள்ளது.

எனினும் தற்போது நிலவும் மோசமான காலநிலை எதிர்வரும் 13 ஆம் திகதி மாற்றம் அடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பாதிப்புகளின் எண்ணிக்கை எந்த மட்டத்தில் காணப்பட்டாலும் நாடுபூராகவும் அதிகளவிலான வெப்ப நிலையும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகின்றன. அனைத்து பிரதேசங்களிலும் மக்களினால் தாங்க முடியாத வெப்பநிலை காணப்படுகின்றது. இவ்வாறான காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சததில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்க கூடிய நிலைமை ஏற்படும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. மேலும் மின் விநியோகத்திலும் பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டமா! எதற்கு?
Next post இலங்கை வருகின்றார் பொதுநலவாய செயலாளர் நாயகம்…!!