கண்டியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம குகை! பல தகவல்கள் அம்பலம்…!!

Read Time:3 Minute, 21 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90கண்டி புறநகருக்கு அருகாமையில் பாரிய குகையொன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

கெப்படியாவ கிராமத்தில் நீர் விநியோகத் திட்டம் ஒன்றிக்காக அகழ்வு பணி மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டது.

குகை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் 30 அடியில் ஆழமான சுரங்கப்பாதை ஒன்றை கண்டதாக அந்தப் பகுதியில் வேலை செய்துக் கொண்டிருந்த பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த சுரங்கப்பாதையில் இறங்கி அதனை கண்கானித்துள்ள நிலையில், அங்கு பயணிக்க கூடிய இரண்டு வீதிகள் காணப்பட்டதாகவும், கடினமின்றி 1000 அடி தூரத்திற்கு பயணிக்க முடியும் என பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கண்டி இராஜதானியின் போது ஹங்குராங்கெத்த வரையில் ஒரு ரகசிய சுரங்கப் பாதை காணப்பட்டதாக கூறப்பட்டது, இது அதுவாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் அந்த இடத்தை பாதுகாப்பாக மூடி வைப்பதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தீர்மானித்துள்ளது.

இந்த குகை, சுரங்கப்பாதை அல்ல எனவும் ஆழமான கிராபைட் சுரங்கமாக இருக்கலாம் என அந்த இடத்தை ஆய்வு செய்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் தலாதுஓய, மாரஸ்ஸன, மைலாப்பிட்டிய, கந்தே சந்தி போன்ற பிரதேசங்ககளில் இவ்வாறான பல கிராபைட் சுரங்கங்கள் காணப்பட்டதாகவும், இந்த ஆழமான குகை அவ்வாறான சுரங்கமாக இருக்கலாம் என அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த சுரங்கம் கிட்டத்தட்ட 30 வருடங்கள் பழைமையானதாக இருக்கலாம். சுரங்கத்தை தோண்டும் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அதனை கைவிட்டு சென்றுள்ளதாகவும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் கண்டி பிரதேச பணிப்பாளர் இந்திரஜித் ரோதிரிகு தெரிவித்துள்ளார்.

பல வருடங்கள் பழைமையானது என்பதனால் இந்த சுரங்கம் தொல்பொருள் பெறுமதியை கொண்டுள்ளதா என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

தொல்பொருள் ஆய்வு திணைக்கள அதிகாரிகள் அங்கு வரும் வரையில் அந்த இடத்தை பாதுகாத்து வைக்குமாறு, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தினால், பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உப்பு கூடினாலும் பிரச்னை… குறைந்தாலும் பிரச்னை… உப்பு நல்லதா?
Next post நாட்டில் 02 மில்லியன் மனநோயாளர்கள்…!!