அமெரிக்க பெண்ணிடம் காதல் வளர்த்த அரேபிய வாலிபர் சிறையில் அடைப்பு…!!

Read Time:2 Minute, 19 Second

201610111652263915_saudi-teen-flirts-online-with-a-young-woman-in-california-_secvpfசவுதியில் திருமணம் ஆகாத ஆண், பெண் பழகுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு யாரேனும் பழகினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதுதவிர சிறையிலும் அடைக்கப்படுவர். இதனால் அந்நாட்டு இளைஞர்கள் பார்வை இணையதளங்களின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் இணையதளங்களையும் சவுதி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சவுதியை சேர்ந்த அபு சின்(19) என்ற இளைஞர் கலிபோர்னியாவைச் சேர்ந்த கிறிஸ்டினா கிராக்கட்(21) என்ற பெண்ணிடம் இணையதளம் மூலம் பழகி வந்துள்ளார்.

இணையம் மூலமாக சில வாரங்கள் பேசிப் பழகியபின் கிறிஸ்டினாவிடம், ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று கூற கிறிஸ்டினாவும் புன்னகையுடன் அபுவின் காதலை ஏற்றுக் கொண்டார். நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று
அபு விளையாட்டாக கிறிஸ்டினாவிடம் கேட்க, அவரும் நான் உன்னைத் திருமணம் செய்ய விரும்புகிறேன் என தெரிவித்தார்.

இவர்கள் உரையாடலைக் கண்காணித்த சவூதி போலீசார் நாகரிகம் மற்றும் மத மதிப்புகளை மீறியதாக அபு சின்னைக் கைது செய்து கடந்த மாதம் சிறையில் அடைத்தனர்.

தற்போது,பெயிலில் வெளிவந்திருக்கும் அபு சின் இனி சமூக வலைதளங்களை நீண்ட நாள் பயன்படுத்த மாட்டேன் என்றும் பெண்களுடன் இணையத்தில் உரையாடுவது வருந்தக் கூடிய செயல் என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அபு சின் மீதான குற்றம் நிரூபணமானால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 800,000 டாலர் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த தடை…!!
Next post விக்கிரவாண்டி அருகே 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி…!!