ரஜினிகாந்தை விட பெரிய நடிகர் யாருமில்லை: ராதிகா ஆப்தே புகழாரம்…!!

Read Time:1 Minute, 52 Second

201610111204238078_there-is-no-bigger-star-than-rajinikanth-radhika-apte_secvpfபெங்களூரில் நடைபெற்ற உடல்நலம் தொடர்பான ‘ஆப்ஸ்’ ஒன்றின் வெளியீட்டு விழாவில் நடிகை ராதிகா ஆப்தே (31) கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம் ‘உங்களுக்கு தமிழ் தெரியாத நிலையில் ‘கபாலி’ படத்தில் நடித்தபோது ரஜினிகாந்துடன் மராத்தி மொழியில் பேசினீர்களா?’ என்று ஒரு நிருபர் கேட்டார்.

மராத்தி மொழியில் அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். நாங்கள் இருவரும் முதலில் ஆங்கிலத்தில் தான் பேசினோம். ரஜினிகாந்திடம் நான் கேட்ட முதல் கேள்வி, ‘உங்களுக்கு மராத்தி தெரியுமா? என்பதுதான். கர்நாடகாவின் பெல்காவி பகுதியை சேர்ந்தவன் என்பதால் எனக்கு மராத்தி மொழியில் பேசத் தெரியும் என்று அவர் கூறினார்.

‘கபாலி’ படத்தின் ஷூட்டிங்கின்போது பல சந்தர்ப்பங்களில் டைரக்டர் ரஞ்சித் சில காட்சிகள் தொடர்பாக சொன்ன விளக்கங்களை எல்லாம் எனக்காக ரஜினிகாந்த் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறினார்.

அவரைப்போல் பணிவான, எளிமையான பெரிய நடிகர் யாருமில்லை. மிகவும் உண்மையானவராகவும், கடுமையான உழைக்கக் கூடியவராகவும் உள்ள ரஜினி சாருடன் நடித்தது மிக உயர்ந்த அனுபவமாக அமைந்திருந்தது’ என்று ராதிகா ஆப்தே பதில் அளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளா: கன்னூரில் பாரதிய ஜனதா தொண்டர் வெட்டிப் படுகொலை…!!
Next post காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லதா?