எப்போதும் அஜித் ஒரு ஜென்டில்மேன்: காஜல் அகர்வால்..!!

Read Time:1 Minute, 27 Second

201610121554271003_cni-12102016-19_secvpfவிஜய்யுடன் ‘ ஜில்லா’ ‘துப்பாக்கி’ படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். இப்போது அஜித்தின் 57 வது படத்தில் அவருடைய ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவது காஜல் அகர்வாலுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில், காஜல் அகர்வால் ரசிகர்களுடன் டுவிட்டரில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் அஜித் பற்றி கேட்ட கேள்விக்கு, ‘படப்பிடிப்புதளத்தில் நடிக்கும் போதும், படப்பிடிப்புக்கு வெளியிலும் அஜித் ஒரு ஜென்டில் மேன். அனைவரையும் மதிக்க கூடியவர்’. என்று குறிப்பிட்டார்.

காஜல் அகர்வால் தற்போது ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவியின் 150-வது படத்திலும் நடித்து வருகிறார். விஜய் – அட்லி மீண்டும் இணையும் புதிய படத்திலும் நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களால் சிறுநீரை அடக்க முடியாதது ஏன்?
Next post வைத்தியர்கள் இன்மையால் யாழில் மாணவி பலி…!!