சீனா: புலி வாயில் சிக்கி உயிர்தப்பிய பெண் ரூ.2 கோடி கேட்டு வனவிலங்கு காப்பகத்தின் மீது வழக்கு…!!

Read Time:3 Minute, 47 Second

201610141255487965_woman-mauled-by-tiger-to-sue-beijing-wildlife-park-for-2_secvpfசீனா தலைநகர் பெய்ஜிங்கில் பெடாலிங் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு செல்லும் பார்வையாளர்கள் தங்கள் கார்களில் வனப்பகுதியை சுற்றி விலங்குகளை நேரில் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி 2 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் இந்த வனப்பகுதிக்குள் காரில் சென்றனர். புலிகள் பகுதிக்கு சென்றபோது காரில் இருந்த பெண் திடீரென கதவை திறந்து கீழே இறங்கினார்.

உடனே அங்கு சுற்றித் திரிந்த புலிகள் அவர் மீது பாய்ந்து தாக்கின. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாயார் காரைவிட்டு கீழே இறங்கி அவரை காப்பாற்ற முயன்றார்.

முதலில் பிடித்த பெண்ணை விட்டுவிட்டு இரண்டாவதாக காரில் இருந்து இறங்கிய பெண்ணை சூழ்ந்து புலிகள் தாக்கி காட்டுக்குள் இழுத்து சென்றன. அங்கு பாதுகாப்புக்கு இருந்த பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் ஓடிவருவதற்குள் காட்டுக்குள் இழுத்து சென்ற பெண்ணை புலிகள் கடித்துக் குதறிக் கொன்றன.

புலிகள் தாக்கியதால் படுகாயம் அடைந்த மகளை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தற்போது உடல்நிலை தேறியுள்ள அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கதிக்கு பெடாலிங் வனவிலங்கு சரணாலயம் 2 மில்லியன் யுவான் (இந்திய மதிப்புக்கு சுமார் 2 கோடி ரூபாய்) இழப்பீடு அளிக்க வேண்டும் என வழக்கு தொடர தீர்மானித்துள்ளார்.

புலிகளால் தாக்கி கொல்லப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 1.2 மில்லிய யுவான்களை (இந்திய மதிப்புக்கு சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய்) வழங்க வனவிலங்கு காப்பக நிர்வாகம் ஒப்புக்கொண்ட நிலையில் தனது சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட 7 லட்சத்து 45 ஆயிரம் யுவான்கள் போதுமானதாக இல்லை என பாதிக்கப்பட்ட பெண் 2 மில்லியன் யுவான் இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.

காரை விட்டு கீழே இறங்க கூடாது என காப்பக ஊழியர்கள் சரியான முறையில் முன்னெச்சரிக்கை செய்யவில்லை. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கினோம் என அவர்கள் கூறும் காகிதத்தை ஏதோ நுழைவுக் கட்டண ரசீது என எண்ணி நாங்கள் கையொப்பமிட்டோம்.

மேலும், நானும் எனது தாயாரும் புலிகளிடம் சிக்கி, உயிருக்கு போராடியபோது அருகாமையில் இருந்த பாதுகாவலர்கள் எங்களை காப்பாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்கொரியா: சுற்றுலா பேருந்து சாலை தடுப்பில் மோதி தீபிடித்தது – 10 பேர் பலி…!!
Next post அமெரிக்காவில் பாகிஸ்தான் சிறுவன் மீது இனவெறி தாக்குதல்..!!