உயிரியல் பூங்காவில் 2 முறை கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியேறிய சைக்கோ கொரில்லா…!!

Read Time:2 Minute, 3 Second

201610142159165577_psycho-kumbuka-london-gorilla-escapes-zoo-enclosure_secvpfலண்டன் உயிரியல் பூங்காவில் கொரில்லா கூண்டு கண்ணாடியை உடைத்துக் கொண்டு தப்பியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. பாதுகாப்பு காரணங்கள் கருதி பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டிடங்களுக்குள் வைத்து பூட்டப்பட்டனர்.

தப்பியோடிய கொரில்லாவால் மற்றவர்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று பூங்கா ஊழியர்கள் மயக்க மருந்துடன் கொரில்லாவை பிடிக்க தீவிரமாக செயல்பட்டனர்.

இருப்பினும் துப்பாக்கியில் இருப்பது மயக்க மருந்தா அல்லது துப்பாக்கி குண்டுகளா என்பதை பூங்கா செய்தி தொடர்பாளர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் தவறி விழுந்த சிறுவனை காப்பாற்ற கொரில்லாவை சுட்டுக் கொன்றனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது லண்டன் உயிரியல் பூங்காவில் கொரில்லா தப்பியுள்ளது.

மாலை 5.30 மணி அளவில் தப்பியோடிய கொரில்லாவை 6.30 மணியளவிலே பிடித்து விட்டதாக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அது ஒரு சைக்கோ கொரில்லா என்றும், ஏற்கனவே 2 முறை கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கொரில்லா தப்பியோடிய சம்பவத்தில் யாருக்கும் ஆபத்து ஏற்பட்டதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக செல்ல முயன்ற 8 இந்தியர்கள் கைது…!!
Next post தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் பலி: தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்…!!