அலெப்போ நகரில் இரண்டாவது நாளாக சிரியா-ரஷியா கூட்டுப்படைகள் போர்நிறுத்தம்..!!

Read Time:1 Minute, 48 Second

201610200502131591_pause-in-aleppo-bombing-holds-into-second-day_secvpfசிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷ்யாவின் படைகள் இணைந்து அலெப்போ நகர் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அலெப்போ நகரில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லும் வகையில் 48 மணிநேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இருதரப்பினரும் முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, வரும் 20-ம் தேதி காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணிவரை 8 மணிநேர தற்காலிக போர்நிறுத்தம் செய்ய சிரியா-ரஷியா கூட்டுப்படைகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சிரியா-ரஷியா கூட்டுப்படைகள் போர்நிறுத்தம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது. 8 மணி நேர ஒப்பந்தம் வியாழக்கிழமை(இன்று) வரை நீட்டிக்கப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பெர்லின் நகரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே நீண்ட காலத்திற்கு போர் நிறுத்தத்தை கொண்டு வருவதற்கு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பதில் பணிப்பாளர் நியமனம்…!!
Next post அமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு: 4 மாணவர்கள் படுகாயம்…!!