புதுக்குடியிருப்பு தாக்குதலில் 43பேர் உயிரிழப்பு, 60பேர் படுகாயம்

Read Time:1 Minute, 45 Second

Attack.mullaitivu.jpgமுல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு செஞ்சோலை வளாகத்தில் புலிகளினால் வழங்கப்பட்ட முதலுதவி பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை இன்றுகாலை இடம்பெற்ற வான்படைத் தாக்குதலில் 43மாணவிகள் உயிரிழந்ததுடன், 60பேர் காயமடைந்திருப்பதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையனை மேற்கோள் காட்டி ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுனாமியால் பெற்றோரை இழந்த சிறுவர்களே இதில் பெரும்பாலும் உயிரிழந்துள்ளதாகவும் இளந்திரையனை மேற்கோள் காட்டி ரொய்டர் மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் சிறுவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக புலிகள் தெரிவித்துள்ள வதந்தியில் எவ்வித உண்மையுமில்லையென்றும், புலிகளின் இலக்குகள் என இனங்காணப்பட்ட பிரதேசங்களிலேயே தாம் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும்

புலிகளினால் இளைஞர்கள் யுவதிகளுக்கு மட்டுமல்ல சிறுவர்சிறுமியர் உட்பட குழந்தைகளுக்கும் ஆயுதம் மருத்துவஉதவி போன்ற பல்வேறு தரப்பட்ட பயிற்சிகள் வழங்கப்படும் இடங்களிலேயே தாம் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

Attack.mullaitivu.jpg

Attack.mullaitivu.1.jpg
Attack.mullaitivu.2.jpg
LTTE.Training.CHILDS.jpg
LTTE.Training.Youths.jpg

நன்றி.. தகவல்கள் படங்கள்:- அதிரடி
www.athirady.com

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொழும்பு கொள்ளுப்பிட்டி குண்டுத் தாக்குதல்
Next post இஸ்ரேல் மீது காசாவில் இருந்து தாக்குதல்