By 24 October 2016 0 Comments

திருகோணமலையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி…!!

625-117-560-350-160-300-053-800-210-160-90-2திருகோணமலை – புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 8 ஆம் கட்டைப் பகுதியில் மின்சாரம் தாக்கி, ஒருவர் உயிரிழந்துள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (24) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இந்த சம்பவத்தில், விக்கிரமசிங்க (வயது 54) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், அப்பகுதியிலுள்ள ரஜமகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்குக் கட்டப்பட்டிருந்த கொடியினை கழட்டிக் கொண்டிருந்த போது பக்கத்திலிருந்த மின்கம்பத்தில் கொடி பட்டதனால் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Protected by WP Anti Spam