அது குறித்து ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 உண்மைகள்…!!

Read Time:5 Minute, 33 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90நாம் தெரிந்தே செய்யும் சில காரியங்களினாலும், தெரியாமல் தொடர்ந்து செய்துவரும் ஒரு சில காரியங்களினாலும் தான் ஆண்களுக்கு விறைப்பு தன்மையில் தாக்கங்கள் உண்டாகின்றன.

அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டம் கொண்டவர்களிடம் அதிகளவில் விறைப்பு தன்மையில் எதிர்மறை தாக்கங்கள் உண்டாகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதயம்:

ஆண்ட்ரூ மெக்கல்லாஃப் எனும் நியூயார்க்கை சேர்ந்த மருத்துவர், ஆண்களின் இதயத்தை எந்தெந்த பிரச்சனைகள் எல்லாம் பாதிக்கிறதோ, அவை எல்லாமே ஆண்களின் பிறப்புறுப்பையும் பாதிக்கும் என ஒரு ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார். இதயத்தில் உண்டாகும் தாக்கங்கள், ஆண்களின் விறைப்பு தன்மையிலும் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கலாம்.

தூக்கமின்மை:

ஆண்களுக்கு விறைப்பு உண்டாவதில் குறைபாடு எழ முக்கிய காரணம் தூக்கமின்மை. மனித உடல் என்பது நேர காலம் திட்டமிட்டு செயல்படும் ஒன்று. நீங்கள் ஓவர் டைம் செய்வது, உங்கள் உடலை சோர்வுற்று போக செய்யும். இதனால், விறைப்பு உண்டாவதில் தாக்கம் ஏற்படும். எனவே, தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும், உறங்க வேண்டும் என சிறப்பு நிபுணர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

பல் பிரச்சனைகள்:

டைரி ஆப் செக்சுவல் ட்ரக்ஸ் நடத்திய ஆய்வல், ஆண்களில் யாரிடமெல்லாம் விறைப்பு உண்டாவதில் குறை தெரிகிறதோ, அவர்களிடம் எல்லாம் மூன்று மடங்கு ஓரல் ஹெல்த் கோளாறுகளும் தென்படுகின்றன என கண்டறிந்துள்ளனர்.

இடுப்பு சுற்றளவு:

கார்னெல் கல்லூரி நடத்திய ஆய்வொன்றில், 40 இன்ச் இடுப்பு சுற்றளவுக்கு மேல் இடை கொண்டுள்ள ஆண்களிடம் தான் விறைப்பு உண்டாவதில் அதிக குறைபாடு தென்படுகிறது என்று தெரிவித்துள்ளது. எனவே, ஆண்கள் தங்கள் இடுப்பு சுற்றளவு மற்றும் உடல் பருமனில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சக்தி வாய்ந்த உடல்:

உணவு என்பது உங்கள் உடலில் கொழுப்பாக சேராமல், உடலில் சக்தியை அதிகரிக்கும் வண்ணம் தெரிவு செய்ய வேண்டும். நீங்கள் எடுத்துக் கொள்ளும் கொழுப்பு மற்றும் துரித உணவுகள் நீரிழிவு மற்றும் உடல் பருமனை அதிகரிக்க செய்யும். இதனால், இவற்றை தவிர்த்து தானியம், பயிறு வகை உணவுகள், நார்ச்சத்து உணவுகள், கீரை, காய்கறி போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பதட்டமும், டென்ஷனும்:

ஆண்களில் யார் அதிகளவில் பதட்டம் மற்றும் டென்ஷனாக இருக்கிறார்களோ அவர்களிடமும் விறைப்பு தன்மையில் குறைபாடு காணப்படுகின்றன. உங்கள் கோவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், தேவையில்லாத பணி சுமையை குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபட துவங்குங்கள்.

அபாய எச்சரிக்கை:

புகை தான் ஆண்களின் விறைப்பு தன்மைக்கு பகை. ஓர் ஆய்வில் நாள் ஒன்றுக்கு 20 – 40 என்ற அளவில் புகைக்கும் ஆண்களிடம் 60% வரை விறைப்பு தன்மையில் தீய தாக்கம் உண்டாகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது இரத்த ஓட்டத்தின் வேகத்தையும் குறைக்கிறது.

மது போதை:

அமெரிக்காவின் கட்டுப்பாடு மற்றும் எதிர் செயல் நடவடிக்கை மையத்தின் ஆய்வின் படி, ஒருநாளுக்கு இரண்டு ரவுண்டுக்கு மேல் குடிப்பது ஆண்களின் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆல்கஹால் அளவு பொருத்து மாறுபடலாம் என்றும் கூறியுள்ளனர். ஆல்கஹால் காரணமாக உண்டாகும் ஹார்மோன் சமநிலை இன்மை காரணத்தால் பாதிக்கப்படும் முதல் விஷயமே விறைப்பு தன்மையில் ஏற்படும் எதிர்மறை தாக்கங்கள் தான்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவசேனாவின் வருகை சொல்லும் செய்தி…!! கட்டுரை
Next post சமூக வலைதளம் பயன்படுத்தியதால் விவாகரத்து: 2 மணி நேரத்தில் முடிந்து போன மணவாழ்க்கை…!!