புறப்பட்ட உடனே வெடித்து சிதறிய விமானத்தின் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ

Read Time:2 Minute, 17 Second

plane_cross_001-w245மால்டா நாட்டில் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளில் விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்து சிதறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டாவில் உள்ள Luqa விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7.20 மணிக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. லிபியா நாட்டிற்கு புறப்பட்ட அந்த விமானத்தில் 5 விமானக்குழுவினர் தவிர பயணிகள் யாரும் இல்லை.

இந்நிலையில், விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தலைகீழாக சென்றுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் விமானத்தின் மூக்கு பகுதி தரையில் பயங்கரமாக மோதியதில் மொத்த விமானமும் வெடித்து சிதறியுள்ளது. இக்காட்சி சாலையில் சென்ற கார் ஒன்றின் கமெராவில் பதிவாகியுள்ளது.

விமானம் வெடித்து சிதறியதில் தீப்பிழம்புகள் ஏற்பட்ட அப்பகுதியே புகை மண்டலமாக மாறியுள்ளது. இவ்விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், விமானத்தில் இருந்த 5 விமானிகளும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆழ்வார்திருநகரி அருகே மூதாட்டி அடித்துக்கொலை…!!
Next post வயதான கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண்ராஜா காமராஜ்…!!