யாழ்.துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸாரின் தரப்பிலேயே தவறு..!!

Read Time:3 Minute, 1 Second

hqdefaultயாழ்.பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒருவர் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் உயி­ரி­ழந்த சம்­ப­வத்தில் பொலிஸ் அதி­கா­ரிகள் தரப்பில் தவறு இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தர தெரி­வித்­துள்ளார்.

அங்கு, கொள்ளைச் சம்­ப­வங்­களோ, குழு­வொன்றால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்­களோ அல்­லது உயி­ரச்­சு­றுத்தல் போன்ற துப்­பாக்கிச் சூடு நடத்தும் அள­விற்கு இக்­கட்­டான சூழ்­நிலை ஏற்­பட்­டி­ருக்க வாய்ப்­பில்லை என்று அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

விஷே­ட­மாக அந்த சம்­ப­வத்தை உட­ன­டி­யாக அறி­விக்­காமை அந்த அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தவறு என்றும், அது தெளி­வான விதி மீறல் செயற்­பாடு என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தர சுட்டிக்காட்டியுள்ளார்.

150 ஆவது பொலிஸ் தினத்தை முன்­னிட்டு அநு­ரா­த­பு­ரத்தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தர ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் இவ்­வாறு கூறி­யுள்ளார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

அந்த மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரி­வாகும் வரை­யி­லான காலத்தில் பெற்றோர் பட்ட கஷ்­டங்­க­ளையும், இரண்டு உயிர்­களின் பெறு­ம­தி­யையும் நினைக்கும் போது வருத்­த­ம­ளிக்கின்றது.

எவ்­வா­றா­யினும் இது போன்ற சந்­தர்ப்­பங்­களில் குறைந்­த­பட்ச மற்றும் தேவை­யான பலத்தை பிர­யோ­கிப்­ப­தற்கு பொலி­ஸா­ருக்கு அனு­மதி இருக்கின்றது என்றார்.

சுன்னாகம் பகு­தியில் இரு பொலிஸ் அதி­கா­ரிகள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட வாள்­வெட்டு தாக்­குதல் சம்­பவம் தொடர்­பிலும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வி எழுப்­பி­னர். அதற்கு பதி­ல­ளித்த பொலிஸ் மா அதிபர்,

அந்த சந்­தர்ப்­பத்தில் குறித்த இரண்டு புல­னாய்வு அதி­கா­ரி­களும் சீரு­டையில் இருக்­காத கார­ணத்­தினால், அவர்கள் பொலிஸ் அதி­கா­ரிகள் என்­பது தெரியாம­லேயே அந்த தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்று கூறி­யுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறந்த பின்னரும் துடிக்கும் பாம்பின் இதயம்… மிக அரிய காட்சி…!!
Next post 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…!!