சிவனொலிபாதமலையில் தரையிறங்கிய ஹெலிகொப்டர் – காரணம் என்ன..?

Read Time:2 Minute, 8 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2சிவனொளிபாதமலை வனப் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தேயிலை தோட்டமொன்றுக்கு மத்தியிலுள்ள வீதியொன்றில் இந்த ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று இவ்வாறு வெளியாகியுள்ளது.

சிவனொளிபதமலையை அண்மித்துள்ள மரே தோட்ட பகுதியிலேயே இந்த ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகின்ற காணியானது, முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த காணியானது, சவூதி அரேபியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவருகின்றது. இந்த காணியில் சுற்றுலா விடுதியொன்றை அமைப்பதற்கான தீர்மானத்திலேயே சவூதி அரேபிய வர்த்தகர் காணியை கொள்வனவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, மவுசாகலை நீர்நிலையை அண்மித்து பாரிய சுற்றுலா விடுதியொன்று நிர்மாணிக்கப்படுகின்றமைக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நல்லதண்ணீ பொலிஸ் நிலையத்திலும் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணைக் கடத்தியவரை விடுதலை செய்தார் நீதிபதி கணேசராஜா…!!
Next post வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இயலாதது: அமெரிக்க உளவு பிரிவு…!!