அரச உடமையாக்கப்பட்ட விஜேவீரவின் காணியை அவரது மனைவிக்கு வழங்க மைத்திரி அனுமதிப்பாரா?

Read Time:1 Minute, 46 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அரசாங்கமும் தீர்மானித்தால் நாவலப்பிட்டி உலப்பனையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீரவின் அரசுடமையாக்கப்பட்ட காணியை அவரது மனைவிக்கு வழங்கப்பட முடியும் என காணி அமைச்சின் செயலாளர் ஐ.எஸ்.கே. மஹானாம தெரிவித்துள்ளார்.

உலப்பனையில் அமைந்துள்ள வீட்டை வழங்குமாறு விஜேவீரவின் மனைவி காணி அமைச்சில் இதுவரையில் உத்தியோகபூர்வமாக கோரவில்லை என அவர் கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

காணியை வழங்க முடியாது என கங்கஇஹல கோரலய பிரதேச செயலாளர் தெரிவித்தமை தொடர்பில் ஊடகங்களின் வழியாகவே அறிந்து கொள்ள முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் உத்தரவுகளுக்கு அமைய செயற்பட செயலாளர் என்ற ரீதியில் தமக்கு கடப்பாடு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் காரணிகளின் அடிப்படையில் இந்தக் காணி தொடர்புபட்டிருப்பதாகவும் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் விஜேவீரவின் மனைவி எழுத்து மூலம் கோரினால் இது குறித்து கவனம் செலுத்தப்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் என்றென்றும் இளமைக்கு தாம்பத்யம்…!!
Next post ஆளுநர் கடிதத்தில் மறைக்கப்படும் உண்மைகள்..! யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏமாற்றப்படுகின்றார்களா..?