கம்பஹாவில் மாத்திரம் நான்கு லட்சம் மனநோயாளிகள்…!!

Read Time:1 Minute, 24 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3கம்பஹா மாவட்டத்தில் மட்டும் சுமார் நான்கு லட்சம் மனநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உலக மனநல தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கம்பஹா மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் நளின் ஆரியரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கம்பஹா மாவட்டத்தின் மொத்த சனத்தொகையே 22 லட்சம் தான். ஆனால் இங்கு ஏதோ ஒரு காரணத்தினால் சுமார் நான்கு லட்சம் பேரளவில் மனநோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார, சமூக பிரச்சினைகள் காரணமாகவே மனநோய் ஏற்படுகின்றது. ஆனாலும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான வளங்கள் , போதுமான மருத்துவர்கள் இலங்கையில் இல்லை.

இதன் காரணமாக 2020ம் ஆண்டளவில் இலங்கையில் மனநோயாளிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்கும் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆளுநர் கடிதத்தில் மறைக்கப்படும் உண்மைகள்..! யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏமாற்றப்படுகின்றார்களா..?
Next post சிரியாவில் பள்ளிக்கூடம் மீது தாக்குதலில் 35 பேர் பலி – வேண்டுமென்றே நடத்தி இருந்தால் இது போர்க்குற்றம் என ஐ.நா. கருத்து..!!