போர்க்கோவிலுக்கு ஜப்பானிய பிரதமர் கொய்சுமி சென்றார்

Read Time:1 Minute, 12 Second

Japan-China.jpg2-ம் உலகப்போரின் போது ஜப்பான் சரண் அடைந்த தினத்தின் ஆண்டு தினமான நேற்று யசுகுனி எனப்படும் போர்க்கோவிலுக்கு ஜப்பானிய பிரதமர் கொய்சுமி சென்றார். இப்படி ஜப்பான் தலைவர்கள் இந்த போர்க்கோவிலுக்கு செல்வதற்கு சீனாவும், கொரியாவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதைமீறி கொய்சுமி இந்தக்கோவிலுக்கு சென்று இருக்கிறார்.

சீனா, கொரியா ஆகிய நாடுகளில் நடந்த போரின் போது வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட இந்தக்கோவிலுக்கு செல்வது தங்களை அவமானப்படுத்தும் செயலாக அந்த 2 நாடுகளையும் சேர்ந்தவர்கள் நினைக்கிறார்கள். 2001-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் கொய்சுமி இந்த கோவிலுக்கு செல்வதை தவறாமல் கடைப்பிடித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்தோனேஷியாவில் இன்று நிலநடுக்கம்
Next post இராக் அதிபரின் கட்சி அலுவலகம் முன் குண்டு வெடித்து 5 பேர் சாவு