இராக் அதிபரின் கட்சி அலுவலகம் முன் குண்டு வெடித்து 5 பேர் சாவு
Read Time:40 Second
இராக் அதிபரின் கட்சித் தலைமை அலுவலகம் எதிரே தற்கொலைப் படையைச் சேர்ந்த லாரி குண்டு வெடித்துச் சிதறியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் மோசுல் நகரில் உள்ள அதிபர் ஜலால் தலாபானியின் யூனியன் ஆப் குர்திஸ்தான் கட்சியின் தலைமை அலுவலகம் எதிரே கார்கள் நிறுத்துமிடம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் மாடி வீடு சேதமடைந்தது. 15 கார்கள் எரிந்து சாம்பலாயின.