எங்கள்மீது தாக்கும்போதே திருப்பித் தாக்குகிறோம்- ஜனாதிபதி

Read Time:1 Minute, 56 Second

mahinda_rasabucksay.jpgபுலிகள் எங்கள்மீது தாக்குதல் தொடுக்கும் நிலையிலேயே திரும்பி தாக்குதல்களை தொடுக்கிறோம் எனினும், பேச்சுவார்த்தைகளுக்கான கதவை அரசாங்கம் திறந்தே வைத்துள்ளது. பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒருபோதும் அரசாங்கத்தின் பலவீனமாக கருதிவிடக்கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று கூறினார்.

பத்திரிகை ஆசிரியர்கள், ஊடக நிறுவனத் தலைவர்கள் மத்தியில் நேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அரசையும், என்னையும் விமர்சிக்கும் உரிமை உண்டு. அதற்கான பூரண சுதந்திரத்தை வழங்கியிருக்கிறோம் இருப்பினும் தேசிய பிரச்சினையொன்றின்போது ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

சில ஊடகங்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட தவறிவிட்டன. சமர்கள் நடைபெறும் சமயத்தில் நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசு முயன்று கொண்டிருக்கும் தருணத்தில் எதிரிகளை உயர்த்திக் காட்டி தகவல்களை சிருஸ்டித்து எழுதுவது தேசத் துரோகமாக கருதப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்
Next post வாசலைன்தீக்குச்சியுடன் பெண் பயணி தகராறு: அவசரமாய் தரையிறங்கிய அமெரிக்க விமானம்