முதலிரவில் பால் எதற்காக? ஆரோக்கிய விளக்கம் இதோ..!!

Read Time:3 Minute, 52 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடித்த பிறகு முதல் இரவில் ஏன் மனைவி கையில் “பால் சொம்பு” கொடுத்து அனுப்பிவைக்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

சடங்கு முறைகளில் பால் அருந்துவது என்பது புனிதமாக காணப்படுகிறது.

இல்லற வாழ்க்கையை துவக்கும் இடமாக விளங்கும் முதலிரவன்று பால் அருந்தி துவங்குவதால், அந்த வாழ்க்கை தூய்மையாக துவங்குகிறது என்று கருதி வந்துள்ளனர்.

ஆதி கால மக்கள் செய்த முதல் தொழில் விவசாயம். இது தான் அனைவரின் வாழ்வாதாரமாக விளங்கி வந்தது. விவசாயத்திற்கு உதவும் பசுவை கடவுள் போல கருதினர். சாணம், கிருமிநாசினியாகவும், பால் பொருட்கள் உடலுக்கு வலிமை தந்து, அதன் மூலம் செல்வம் ஈட்டவும் வழிவகுத்தது.

எனவே, பசுவும் அதன் மூலம் கிடைக்கும் பாலும் அதிர்ஷ்டம் என நம்பினார். எனவே, பால் அருந்தி இல்வாழ்க்கையை துவக்குவதால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருகும் என்ற எண்ணமும் நிலவி வந்தது.

உடல் அசதியாக இருக்கும் தம்பதிகளின் உடலை புத்துணர்ச்சி அடைய உதவும் பானம் பால். இது உடலில் உள்ள சோர்வை போக்கி சுறுசுறுப்பை தரும். மற்றும் பாலில் இருக்கும் டிரிப்டோபென் (Trytophan) எனப்படும் அமினோ அமிலம் உடலை இலகுவாக உணர உதவுமாம்.

இதற்காகவும் கூட பால் அருந்தி வருவது முதலிரவு வழக்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பாலுணர்வை தூண்டும் குங்குமப்பூ, மஞ்சள் போன்றவை கலந்து பாலை பருகுவது பாலுணர்வை தூண்ட உதவுகிறது.

இதனால், தாம்பத்தியம் சிறக்கும் என்பதாலும் முதலிரவில் பால் பருகுவது வழக்கமாக பின்பற்றுப்பட்டுள்ளது.

உணர்வு ரீதியான விளக்கம்

பால் போல தூய்மையான சுவையான ஒரு வாழ்க்கையை இருவரும் தொடங்கவேண்டும், பால் போல கலப்படம் இல்லா வெண்மையான குணம் இருவருக்கும் இருக்கவேண்டும்.

அதாவது, முதலில் மனைவி தன் கணவனுக்கு பால் சொம்பை நீட்டுவாள். கணவன் அதை வாங்கி இந்த பாலின் உள்ள சுவை, மணம், வெண்மை, போல நமது வாழ்க்கையிலும் இன்பம், துன்பம், விட்டுக்கொடுத்தல், இன்று முதல் தொடங்கும் என்ற அர்த்தத்தில் பாதி பால் பருகுவான்.

மீதி பாலை தன் மனைவிக்கு கொடுத்து இனி உங்கள் பாதையே என் பாதை, எந்த நிலையிலும் பாலின் உள்ள வெண்மை பிரியாதது போல் மரணம் வரை உன்னுடன் நான் இருப்பேன் என்ற அர்த்தத்தில் மீதி பாலை அருந்துவாள்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளவயதிலேயே நரை முடியா?.. இதை ட்ரை பண்ணுங்க…!!
Next post அரசாங்கத்தின் மிகப் பெரிய 10 மோசடியாளர்கள் பற்றிய விபரங்கள்…!!