இஸ்ரேல் வாபஸ் ஆன இடத்தில் லெபனான் ராணுவம் நுழைந்தது

Read Time:2 Minute, 30 Second

Lepanan.Flag1.jpgலெபனான் நாட்டின் மீது போர் தொடுத்த இஸ்ரேல் அங்கு தெற்கு பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றிய ஐக்கிய நாட்டு படை தலைமையில் இப்போது போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி இஸ்ரேல் லெபனானில் கைப்பற்றிய பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். அதை ஏற்று இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்து முற்றிலும் வெளியேறி விட்டது.

இஸ்ரேல் பிடிப்பதற்கு முன்பு இந்த பகுதி ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஐ.நா. ஒப்பந்தபடி இனி லெபனான் ராணுவம் அந்த இடத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி லெபனான் ராணுவம் அந்த இடத்திற்குள் நுழைந்தது. அவர்களுடன் சேர்ந்து ஐ.நா. அமைதி படையும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். இதற்காக ஏற்கனவே 2 ஆயிரம் வீரர்கள் அலுவலகப் பணியில் உள்ளனர். மேலும் படைகள் அனுப்பப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்தை கண்காணிக்க 2 விசேஷ தூதர்களை ஐக்கிய நாட்டு சபை அனுப்பி வைத்துள்ளது.

போரினால் வெளியேறிய மக்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டு இருப்பதை அடுத்து வீடு திரும்பி வருகின்றனர். ஆனால் அவர்களின் வீடுகள் இடிந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதபடி உள்ளனர். தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

இதற்கிடையே இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து போராடிய ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை ஈரான் பாராட்டி உள்ளது. இது குறித்து ஈரான் அதிபர் அப்துல்லாஅலி காமினி ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் “நீங்கள் இஸ்லாமிய நாட்டுக்கு கிடைத்த சொத்து. நீங்கள் இஸ்ரேலை பெற்று கொள்வது இஸ்லாமுக்கு கிடைத்த வெற்றியாகும்” என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லண்டன் விமான தகர்ப்பு சதி: அல்கொய்தாவின் ‘நம்பர் 3’ தீட்டிய திட்டம்!
Next post யாழ்ப்பாணத்தில் 200 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளாக புலிகள் கூறியுள்ளனர்… ஆனால், அதை ராணுவம் மறுப்பு