தவறான உறவில் குழந்தைகளை பெற்று விற்பனை செய்யும் கும்பல்..!!

Read Time:8 Minute, 8 Second

201611071100160864_tenkasi-alangulam-areas-baby-kidnap-gang-arrest_secvpfதென்காசி, ஆலங்குளம் பகுதியில் தவறான உறவில் பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்யும் கும்பல்கள் போலீசில் சிக்கியுள்ளது. இதுகுறித்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் நேரு நகரை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 35). இவரது மனைவி தேவிகா (33). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் ஒரு குழந்தையை சட்ட பூர்வமாக தத்து எடுக்க அருணாச்சலம் முடிவு செய்துள்ளார். இது குறித்து அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் நயினார் (48) என்பவரிடம் அவர் கூறினார்.

இதையடுத்து பிறந்து ஒரு மாதமே ஆன ஆண்குழந்தையை கடந்த மாதம் 7-ந் தேதி அருணாச்சலத்திடம் நயினார் கொடுத்தார். ஆனால் சட்டபூர்வமாக குழந்தையை தத்தெடுத்ததற்கு எந்த ஆவணங்களையும் அவர் கொடுக்கவில்லை. இது குறித்து அருணாச்சலம் கேட்டபோது பிறகு தருவதாக நயினார் கூறியுள்ளார்.

சில நாட்கள் கடந்த பின்னும் ஆவணங்களை நயினார் கொடுக்கவில்லை. இதனால் அவரிடம் அருணாச்சலம் ஆவணங்களை கேட்டு தகராறு செய்தார். அப்போது ஆவணங்கள் அனைத்தும் ஆலங்குளத்தில் உள்ளதாக கூறி அவரை அங்கு நயினார் அழைத்து சென்றார். அங்கு பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து நயினாரும் மற்றும் சிலரும் அருணாச்சலத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது குழந்தையை தத்து எடுத்ததற்கு எந்த ஆவணமும் இல்லை என்று கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அருணாச்சலம் உடனடியாக ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து நயினாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தென்காசி, புளியங்குடி, ஆலங்குளம் பகுதிகளில் தவறான உறவில் பிறக்கும் குழந்தைகளை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த திடுக்கிடும் தகவலை நயினார் கூறியுள்ளார்.

ஆலங்குளத்தை சேர்ந்த திருமணபுரோக்கர் ஆறுமுகம் (55) என்பவர் நயினாரின் நண்பர். சிவநாடானூரை சேர்ந்த தங்கபாண்டி (57) என்பவர் ஆறுமுகத்தின் நண்பர். இவர் அடிக்கடி தென்காசி அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது தாழையூத்தை சேர்ந்த பொன்னுத்தாய் (67) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.

பொன்னுத்தாய் தவறான உறவில் கர்ப்பமாகும் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்துள்ளார். மேலும் காதல், கள்ளக்காதல் விவகாரத்தில் பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்துள்ளார். இதற்கு கடையநல்லூரை சேர்ந்த எஸ்தர் (45) என்பவர் உதவி செய்துள்ளார். இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் குழந்தை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். ஆண்குழந்தை என்றால் ரூ.2½ லட்சம், பெண் குழந்தை என்றால் ரூ.1½ லட்சம் என விற்பனை செய்துள்ளனர். குழந்தை விற்பனையில் கிடைக்கும் பணத்தை தங்களுக்குள் பங்கு பிரித்து கொள்வோம் என நயினார் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து நயினார், ஆறுமுகம், தங்கப்பாண்டி, பொன்னுத்தாய், எஸ்தர் ஆகியோரையும் தங்கபாண்டியன் நண்பர்கள் பாலசுப்பிரமணியன் (47), சேர்மன் (49) ஆகியோரையும் ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர். எஸ்தரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அருணாச்சலத்திடம் விற்பனை செய்த குழந்தை கடையநல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தவறான உறவில் பிறந்தது என தெரியவந்துள்ளது. அந்த குழந்தையை போலீசார் மீட்டு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேவானந்த், மாவட்ட சமூக நலத்துறை ஆலோசனை குழு உறுப்பினர் கண்ணன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் ஆலங்குளத்தில் மேலும் ஒரு குழந்தை விற்பனை கும்பல் போலீசாரிடம் சிக்கியது. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொடுங்குளத்தை சேர்ந்தவர் வில்சன் (49). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் தத்து எடுக்க முடிவு செய்தனர். அவர்களிடம் ஈரோட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண்குழந்தையை ஒரு கும்பல் ரூ.2.20 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது.

அந்த கும்பல் வில்சனிடம் மேலும் ரூ.30 ஆயிரம் கேட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வில்சனை ஆலங்குளத்திற்கு வரவழைத்து அங்கு பஸ்நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் அங்கு சென்று வில்சன் மற்றும் அந்த கும்பலை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தை விற்பனை விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்த நாங்குநேரியை சேர்ந்த குணசேகரன் (53), நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்த ஜெரால்டு ஜேசுராஜ் (53) , விளவங்கோடு ராஜ் (54), கூடங்குளம் ராஜ்குமார் (54), அடைக்கலப்பட்டனம் ஜீன்குமார் (37), நாமக்கல்லை சேர்ந்த சரவணக்குமார் (28), ரவிச்சந்திரன் (40), பிரியா (40), ஈரோடு செல்வி (27) ஆகிய 9 பேரை கைது செய்தனர். வில்சன் தம்பதியினரிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை நெல்லை தத்து மைய ஒருங்கிணைப்பாளர் முகமதியிடம் போலீசார் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட 2 குழந்தைகளும் தற்போது ஆலங்குளம் விடியல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

குழந்தை விற்பனை விவகாரத்தில் இதுவரை 16 பேரை ஆலங்குளம் போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு குழந்தை விற்பனை கும்பல் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைகளை தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த கும்பல்கள் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகாத்மா காந்தியின் பேரனின் துயரநிலை..!!
Next post குழந்தைக்கு சரியான முறையில் மசாஜ் செய்வது எப்படி..!!