கண்ணாடி கதவு பெயர்ந்து 3 வயது குழந்தை மீது தாக்கிய பரிதாபம்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 5 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90-1சீனாவில் வணிக வளாகம் ஒன்றில் பாரிய கண்ணாடி கதவு ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது சிறுமி சிக்குண்டு படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் சீனா பகுதியில் அமைந்துள்ளது Foshan நகரில் குறித்த வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சம்பவத்தன்று முதியவர் ஒருவருடன் 3 வயது குழந்தை ஒன்று சென்றுள்ளது.

வளாகத்தின் உள்ளே செல்லும் முகப்பில் பாரிய கண்ணாடி கதவு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்ணாடி கதவானது எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்துள்ளது. இதில் குறித்த சிறுமி சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ காட்சியில் அந்த மூதாட்டி முன்னே நடந்து செல்கிறார். அவரை பின் தொடர்ந்து அந்த 3 வயது மதிக்கத்தக்க குழந்தை நடந்து வந்துகொண்டிருந்தது.

திடீரென்று அந்த கண்ணாடி கதவு பெயர்ந்து சரிந்து விழுந்தது, இதில் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த மூதாட்டி குழந்தையை காப்பாற்றும் நோக்கில் அருகே செல்ல எத்தனிக்கையில் அவரும் தெறித்து விழுகிறார்.

கடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் குழந்தை காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது. கதவு பெயர்ந்து விழுந்தது குறித்து குறித்த வணிக வளாகத்தின் நிர்வாகிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

https://youtu.be/iJL3lcYZfxo

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் ஐந்து ரிட்சர் அளவில் நில அதிர்வு..!!
Next post பிரபல நடிகை அமலா விபச்சார விடுதியில் கைது – அதிர்ச்சியில் திரையுலகம்..!!