அமெரிக்க அதிபர் தேர்தல்: கணவருடன் சென்று வாக்களித்தார் ஹிலாரி கிளிண்டன்..!!

Read Time:3 Minute, 15 Second

201611081938374937_us-election-2016-hillary-clinton-casts-their-vote_secvpfஅமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். ஒவ்வொரு லீப் வருடத்தின் நவம்பர் மாதம் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்கிழமை அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது.

தற்போதைய அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவதை அடுத்து இன்று அங்கு தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. இந்த 2 கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் அடுத்தடுத்து அதிபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர சுதந்திர கட்சி சார்பில் ஹேரிஜான்சன், பசுமை கட்சி சார்பில் ஜில்ஸ்டீன், அரசியல் சட்ட கட்சி சார்பில் டேரல் ஹேஸ்ட்ல், சுயேச்சையாக இவான் மேக்முலின் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.ஆனாலும் ஹிலாரி கிளிண்டன்- டொனால்டு டிரம்ப் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மொத்தம் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் ஓட்டு போடுகிறார்கள். அங்கு முன்கூட்டியே ஓட்டு போடும் முறை உள்ளது. அதன்படி 4 கோடி பேர் ஏற்கனவே ஓட்டு போட்டு விட்டனர். மற்றவர்கள் இன்று ஓட்டு போடுகிறார்கள்.

இந்நிலையில் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், தனது கணவரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான பில் கிளிண்டனுடன் நியூயார்க்கின் சப்பாக்குவா அரசுப் பள்ளியில் அமைந்திருக்கும் வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று வாக்களித்தார்.

வாக்களித்த பின் ஹிலாரி கூறுகையில் “இது மிகவும் பெருமையான ஒரு தருணம். ஏராளமான மக்கள் நான் பதவிக்கு வரவேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு நான் நல்லது செய்ய முடியும் என நம்புகிறேன்” என்றார்.

யாருக்கு ஓட்டுப்போடுவீர்கள்? என அமெரிக்க பத்திரிக்கை நிறுவனங்கள் நடத்திய கடைசிகட்ட கருத்துக்கணிப்பில் ஹிலாரிக்கு 46.2 சதவீதமும், டொனால்டு டிரம்புக்கு 43.7 சதவீதமும் ஆதரவு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் செல்கள் மீட்பு – சம்பவ இடத்தில் விசேட அதிரடிப்படையினர்..!!
Next post விண்வெளி மையத்தில் இருந்து வாக்களித்த அமெரிக்கர்கள்..!!