யாருக்கு வாக்களித்தார் முன்னாள் அதிபர் புஷ்?

Read Time:2 Minute, 15 Second

201611090558277755_george-w-bush-did-not-vote-for-clinton-or-trump_secvpfஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தவிர சுதந்திர கட்சி சார்பில் ஹேரிஜான்சன், பசுமை கட்சி சார்பில் ஜில்ஸ்டீன், அரசியல் சட்ட கட்சி சார்பில் டேரல் ஹேஸ்ட்ல், சுயேச்சையாக இவான் மேக்முலின் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். ஆனாலும் ஹிலாரி கிளிண்டன்- டொனால்டு டிரம்ப் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் இரண்டு வாரங்களுக்கு முன்பே வாக்களித்து இருந்தனர்.

இந்நிலையில் புஷ் யாருக்கு வாக்கு அளித்தார் என்பதை அவரது செய்தி தொடர்பாளர் பிரெட்டி போர்டு தனது இ-மெயில் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “தில் புஷ், ஹிலாரி மற்றும் டிரம்ப் ஆகிய இருவருக்கும் வாக்களிக்கவில்லை. அதாவது அதிபருக்கான பதவிக்கு புஷ் மற்றும் அவரது மனைவி வாக்களிக்கவில்லை. இருப்பினும் குடியரசு கட்சியின் இதர பதவிகளுக்கு அவர் வாக்களித்தனர்” என்றார்.

ஜார்ஜ் புஷ் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர். இருப்பினும் அவர் தன்னுடைய கட்சியின் அதிபர் வேட்பாளாரான டிரம்பிற்கு வாக்களிக்காதது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதையெல்லாம் ஃபிரிட்ஜில் வைக்காதீங்க..!!
Next post அமெரிக்க தேர்தல் முடிவுகள் – ட்ரம்ப் முன்னிலையில்..!!