30 வயதுக்கு மேல் பெண்களுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் குறைய காரணம்..!!

Read Time:2 Minute, 59 Second

capture-26-350x204தாம்பத்தியம் இல்லற வாழ்வில் இன்றியமையாத ஒன்று. மனிதர்களாகிய நாம் தான் உடலுறவை அழகுடன் ஒப்பிட்டு மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றை அதிகரித்து கொண்டு, இல்வாழ்க்கையில் தாக்கம் ஏற்பட வழிவகுத்துக் கொள்கிறோம். பெரும்பாலும் பெண்கள் மத்தியில் தான் 30களில் பயணிக்கும் போது தாம்பத்தியத்தின் போது உடல் சார்ந்த அழகியல் எண்ணங்கள் காரணமாய் தாக்கங்கள் உண்டாகின்றன.

பிரசவம், தாய்மை, தாய்ப்பால் ஊட்டுதல் போன்ற காரணத்தால் பெண் உடலில் மார்பகம், வயிறு, கீழ் உடல் பகுதிகளில் தசை அதிகரித்து, தொங்குதல் உண்டாகின்றன. சிசேரியன் செய்யும் பெண்கள் மத்தியில் இது அதிகப்படியாக காணப்படுகிறது. இதன் காரணத்தால் உடல் வடிவம் மாறுவதால் பெண்களுக்கு இந்த எண்ணம் அதிகரிக்கிறது.

பொதுவாகவே உடல் அழகு, வடிவம் இருந்தால் தான் ஆண்கள் தாம்பத்தியத்தில் விரும்பி ஈடுபடுவார்கள் என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் இருக்கிறது. மிக நடுவயதில் தாம்பத்தியம் என்பது அரிதாக நடக்கும் செயல். மேலும், நடுவயதில் கூடுதல் என்பது மனதின் பால் கொண்ட அன்பினால் தான் அதிகம் உண்டாகும். எனவே, ஆண்கள் மத்தியில் நடுவயதிலும் வடிவம் சார்ந்த தாம்பத்திய ஈடுபாடு மிக குறைந்த அளவில் தான் இருக்கிறது.

பெண்கள், தன் துணை உடல் ரீதியாக தன்னிடம் வடிவத்தை எதிர்பார்க்காமல் செயற்படும் போது, அவர் வேறு பெண்ணுடன் உறவு அல்லது ஈர்ப்பு கொண்டதால் தான் தன்னிடம் அதிகம் எதிர்பார்ப்பது இல்லையோ என்ற எண்ணத்திலும் வாழ துவங்குகிறார்கள். இது போன்ற எண்ணத்தால் அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும், சோர்வு தான் உண்டாகிறதே தவிர, எந்தவிதமான நல்லதும் நடப்பதில்லை.

ஆண்களை விட, பெண்களுக்கு தாம்பத்தியம் சார்ந்த எண்ணம் மற்றும் உணர்வுகள் சற்று வேகமாகவே வயதாக, வயதாக குறைய துவங்கும். இதற்கு காரணம் அவர்களது உடல் கூறு. மாதவிடாய் மற்றும் மாதவிடாய் நின்ற பிறகு அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்கு தாம்பத்தியம் சார்ந்த எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளில் தாக்கதை உண்டாக்குகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்..!!
Next post பக்கவாதத்தை தடுக்கும் உணவுப் பழக்கங்கள்..!!