இனி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: பிரதமர் மோடி அறிவிப்பு..!!

Read Time:3 Minute, 0 Second

201611082056184662_rs-500-and-rs-1000-notes-pulled-out-of-circulation_secvpfபிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டில் கருப்பு பணமும் ஊழலும்தான் ஏழ்மைக்கு காரணமாக உள்ளது. ஏழை மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது இந்த அரசு. அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டிற்கு எதிரான பொருளாதார சூழ்ச்சிகளை முறியடிக்க அரசு திட்டங்களை வகுத்துள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு கருப்பு பணம் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.1.25 லட்சம் கோடி கருப்பு பணத்தை அரசாங்கம் மீட்டுள்ளது. சர்வதேச நாடுகளுடன் போடப்பட்ட பொருளாதார ஒப்பந்தங்களை அரசு மாற்றி அமைத்துள்ளது.

விலைவாசி உயர்வுக்கும் ஊழலுக்கும் தேடித்தொடர்பு உள்ளது என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது. ஊழலால் சேர்த்த பணமோ அலலது கருப்புப் பணமோ ஹவாலா பணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இனி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது. டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் மட்டும் 11ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன்படுத்தலாம். புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படும். (நவம்பர் 9, 10) ஏ.டி.எம். மையங்கள் செயல்படாது.

வங்கிகளில் மேற்கொள்ளப்படும் டிடி, காசோலை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தொடர்பான எந்த பரிவர்த்தனையிலும் மாற்றம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமரின் இந்த அதிரடி அறிவிப்பால் நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. கத்தை கத்தையாக பல கோடி ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ள பெரும் பணக்காரர்கள் மட்டுமின்றி சாதாரண மக்கள்கூட மேற்குறிப்பிட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கையில் வேறு எந்த ரூபாய் நோட்டுக்களும் இல்லாத மக்கள் அத்யாவசிய பொருட்களை வாங்குவதில் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ட்ரம்ப்பை பின் தள்ளி ஹிலரி கிளின்டன் முன்னிலையில்..!!
Next post கலிபோர்னியாவில் வாக்குப் பதிவு மையம் அருகே துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி..!!