By 9 November 2016 0 Comments

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஒபாமாவுக்கு டிரம்ப் அழைப்பு…!!

201611091919451962_trumph-calls-obama-for-america-presidential-inauguration_secvpfஅமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரியில் முடிகிறது. அதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் (70), ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் (69) ஆகியோர் இடையே நிலவிய கடும்போட்டியில் டொனால்ட் டிரம்ப் அதிக வாக்குகளை பெற்று அமெரிக்க அதிபர் பதவியைக் கைப்பற்றினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்புக்கு ஒபாமா வாழ்த்து தெரிவிக்க, பதிலுக்கு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு ஒபாமாவுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும், தனக்கு வாழ்த்துத் தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ள டிரம்ப், இந்தியாவுடனான அமெரிக்க நட்புறவை மேலும் வளர்க்க காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam