இறந்த பூனையை ஹெலியாக மாற்றிய நபர்..!! (வீடியோ)
நெதர்லாந்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தனது வளர்ப்புப் பூனை இறந்தவுடன் அதன் உடலை பறக்கும் ஹெலிகொப்டராக மாற்றியுள்ளார்.
காரொன்றில் அடிபட்டு இறந்தத பூனையின் உடலை புதைக்க விரும்பாத ஜேஸன், அதை பதப்படுத்தி, விசேட பறக்கும் இயந்திரங்களை பொருத்த, ஹெலிகொப்டராக மாற்றியுள்ளார்.
பார்ட் ஜேசன் எனும் இக்கலைஞர் வளர்த்த ஒலிவர் எனும் பூனை, காரொன்றில் அடிபட்டு இறந்தது. அதன்பின் பூனையின் உடலை புதைக்க விரும்பாத ஜேஸன், அதை பதப்படுத்தி, விசேட பறக்கும் இயந்திரங்களை பொருத்த, ஹெலிகொப்டராக மாற்றியுள்ளார்.
விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களில் ஒருவரான, ஒலிவர் ரைட்டின் நினைவாக தனது பூனைக்கு ‘ஒலிவர்’ என ஜேஸன் பெயரிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போது தான் வடிவமைத்த ஹெலிகொப்டருக்கு ஒலிவர் ஹெலிகொப்டர் என பெயரிட்டுள்ளார்.
‘ஒலிவர்’ விரைவில் பறவைகளுடன் பறக்கும் எனக் கூறியுள்ள ஜேஸன், ஆம்ஸ்டர்டம் நகரில் நடைபெறவுள்ள கண்காட்சியொன்றிலும் அதை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
http://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B