அதிகாலை எழுந்ததும் ஆண்களுக்கு இது ஏற்படுவது எதனால் தெரியுமா?

Read Time:3 Minute, 54 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2அதிகாலை உறங்கி எழும் போதே ஆண்களுக்கு விறைப்பு ஏற்படும். பெரும்பாலான ஆண்கள் இதை தினமும் கூட உணர்ந்திருக்கலாம். ஆனால், ஏன்? எதனால், எப்படி? இந்த காலை விறைப்பு ஏற்படுகிறது என்பது பலரையும் வியக்க வைக்கும்.

சில ஹார்மோன்களின் இணைப்பு, கனவு மற்றும் மூளைக்கு மத்தியிலான இணைப்பு என பலவற்றை காலை விறைப்பு ஏற்பட காரணங்களாக கூறப்படுகின்றான…..

பேச்சுவழக்கில் இதை விடியற்காலை விறைப்பு என கூறினாலும். அறிவியல் ரீதியாக என்.பி.டி (Nocturnal Penile Tumescence) என கூறுகிறார்கள். ஆண்கள் மத்தியில் யூகிக்க கூடியதாக இருப்பினும் இது ஆரோக்கியமானது தான் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சுமாராக ஆண்களுக்கு இரவு நேரங்களில் அவர்கள் அறியாமலேயே மூன்றில் இருந்து ஐந்து முறை விறைப்பு கொள்கிறார்கள். இந்த விறைப்பு 20-25 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். இவற்றின் நீடிப்பாக கூட அதிகாலை விறைப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

பொதுவாக ஓர் நம்பிக்கை நிலவி வருகிறது. சிறுநீர்ப்பை நிரம்பியிருந்தால் இந்த காலை விறைப்பு ஏற்படும் என. ஆனால், இதுவரை எந்த ஆய்விலும் இதன் காரணத்தினால் தான் காலை விறைப்பு ஏற்படுகிறது என கண்டறியப்படவில்லை.

காலை விறைப்பு ஏற்படுவதற்கும் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் நோர்பினெப்ஃரைன் (testosterone , norepinephrine) போன்ற ஹார்மோன்களுக்கு மத்தியில் இருக்கும் இணைப்பிற்கும் தொடர்பு இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

மேலும் இதயத்துடிப்பு அதிகமானாலும் கூட இந்த காலை நேர விறைப்பு ஏற்படலாம் என கூறுகிறார்கள். சமீபத்திய ஆய்வில் கனவு மற்றும் மூளையின் செயல்பாடுகளுக்கும், இதற்கும் கூட இணைப்பு இருக்கலாம் கருதப்படுகிறது.

இளம் வயது ஆண்கள், முதிய ஆண்கள் என இந்த காலை விறைப்பில் எந்த வேறுபாடுகளும் இல்லை. இருவர் மத்தியிலும் ஒரே மாதிரித்தான் தென்படுகிறது என ஆரம்பக் காலக்கட்ட ஆய்வுகளில் தகவகள் வெளியாகியிருந்தது.

ஒருவேளை இரவு ஆண்கள் வைத்துக் கொண்ட உடலுறவில் முழுமையடையாமல் இருந்திருந்தால் கூட இரவு மற்றும் காலை வேளையில் விறைப்பு ஏற்படலாம் என உடலியல் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

விறைப்புதன்மை கோளாறு சார்ந்த மருந்துகள் மற்றும் வயாகரா போன்ற மருந்துகள் உட்கொள்வதால் கூட இந்த காலை நேர விறைப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மார்பகத்தில் முட்டைகோஸ் இலைகள் வைத்துக் கட்டுவதால் பெறும் நன்மைகள்..!!
Next post இது மருத்துவர்கள் செய்யுற காரியமா? உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல…!! வீடியோ