By 11 November 2016 0 Comments

17 வயது இளம்பெண்ணை தாயாக்கிய 12 வயது சிறுவன்?

201611111044150117_boy-12-booked-after-teenager-claims-he-fathered-her-child_secvpfகேரள மாநிலம், கொச்சி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. தனது உறவுக்காரப் பையனான 12 வயது சிறுவனுடன் இணந்து தங்களது மகள் பெற்ற அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ளாத அந்தப் பெண்ணின் பெற்றோர் இங்குள்ள காப்பகத்தில் அதை ஒப்படைத்துள்ளனர்.

தன்னை தாயாக்கியதாக குழந்தையை பெற்ற இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த 12 வயது சிறுவன்மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவனை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam