டயட்ல இருக்கீங்களா? அப்படின்னா இரவு உணவாக இதெல்லாம் சாப்பிடுங்க…!!

Read Time:4 Minute, 2 Second

diet_food_001-w245உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. உடல் பருமனால் ஏராளமானோர் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே எடையைக் குறைக்க டயட்டைப் பின்பற்ற வேண்டியது முக்கியமான ஒன்றாக உள்ளது.

இதுவரை நாம் எடையைக் குறைக்க காலையில் என்ன சாப்பிட வேண்டும் மதியம், என்ன சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்போம். ஆனால் இரவு நேரத்தில் என்ன சாப்பிட வேண்டும் என பார்த்ததில்லை. ஆகவே இரவில் எந்த மாதிரியான உணவுகளை சேர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சாலட்:

இரவு உணவை முதலில் சாலட்டில் இருந்து ஆரம்பியுங்கள். இதனால் கலோரிகளை அதிகம் உட்கொள்வதைக் குறைக்கலாம். மேலும் சாலட் நார்ச்சத்துக்கள் வழங்கி, நீண்ட நேரம் வயிற்றை நிறைத்து வைத்திருக்கும். எனவே பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன ஒரு பௌல் சாலட் சாப்பிடுங்கள்.

புரோட்டீன்:

இரவில் கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு பதிலாக புரோட்டீன் உணவுகளை உட்கொள்ளுங்கள். சமீபத்திய ஆய்வு ஒன்றில், பால் பொருட்களில் உள்ள புரோட்டீன் உடல் எடையைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே சிக்கன், மீன், பீன்ஸ் போன்றவற்றை இரவு நேரத்தில் சாப்பிடுவது, நீண்ட நேரம் பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளும். சிக்கன் என்றால் அதை பொரிப்பதற்கு பதிலாக, க்ரில் செய்து சாப்பிடுவது தான் நல்லது.

அஸ்பாகரஸ் சேர்த்த சிக்கன் சூப்:

வீட்டிலேயே அஸ்பாரகஸ் சேர்த்து சிக்கன் சூப் செய்தால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைத்து, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முழு தானியங்கள்:

கைக்குத்தல் அரிசி, திணை மற்றும் முழு கோதுமை பிரட் போன்றவை முழு தானிய உணவுகளாகும். முழு தானிய உணவுகள் அடிவயிற்றுக் கொழுப்புக்களைக் கரைக்க உதவுவதோடு, இதில் நார்ச்சத்துக்களும், மக்னீசியமும் ஏராளமாக உள்ளது.

இனிப்பு பொருட்கள்:

எடையைக் குறைக்க டயட் என்று வரும் போது இனிப்பு பொருட்களை முற்றிலும் தவிர்ப்போம். ஆனால் ஆராய்ச்சியாளர்களோ, இனிப்புக்களை முற்றிலும் தவிர்த்தால், மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் வெளியீட்டை அதிகரிப்பதாக கூறுகின்றனர். மன அழுத்தம் அதிகமானால், அது ஆரோக்கியமான உணவுகளின் மீது நாட்டத்தைக் குறைத்து, ஜங்க் உணவுகளை உட்கொள்ளத் தூண்டும். இதன் காரணமாக உடல் பருமன் மேன்மேலும் அதிகரிக்கும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன்னை பின் தொடர்ந்தவருக்கு இந்தி நடிகை கொடுத்த விசித்திர தண்டனை…!!
Next post செல்லாத 1000 ரூபாவை பிச்சை போட்ட நபர்! இணைய நட்சத்திரமாக மாறிய பிச்சைக்காரர்…!! வீடியோ