மீன்குழம்பும் மண்பானையும்…!!

Read Time:5 Minute, 1 Second

201611121344142350_meen-kulambum-mann-paanaiyum-review_medvpfநடிகர் காளிதாஸ் ஜெயராம்

நடிகை ஆஷ்னா சாவேரி

இயக்குனர் அமுதேஸ்வர்

இசை டி.இமான்

ஓளிப்பதிவு லக்ஷ்மன்

காரைக்குடியில் இருக்கும் பிரபுவுக்கு திருமணமாகி முதல் குழந்தை பிறந்தவுடன் மனைவி இறந்து விடுகிறார். கைக்குழந்தையுடன் மலேசியாவிற்கு செல்லும் பிரபு, அங்கு தமிழர்கள் வாழும் பகுதியில் மீன் குழம்பு கடை வைத்து பெரியாளாகிறார்.

இவருடைய ஒரே மகனான நாயகன் காளிதாஸ் வளர்ந்து பெரியவனாகி கல்லூரியில் படித்து வருகிறார். நாயகி அஷ்னா சவேரியும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் காளிதாசுக்கு மற்ற கல்லூரி மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

பிரபுவுக்கு தன் மகன் காளிதாஸ் தன்னுடன் சகஜமாகவும் ஒரு நண்பர் போல பழக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், காளிதாசால் பிரவுடன் சகஜமாக பழக முடியவில்லை. இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை இருவருக்குள்ளும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி விடுகிறது.

பிரபுவின் நண்பரான ஒய்.ஜி.மகேந்திரன் அப்பா, மகனுக்குள் இருக்கும் பிரச்சனையை தீர்க்க நினைத்து பிரபுவையும் காளிதாசையும் வீட்டிற்கு அழைக்கிறார். அங்கு போதகரான கமல், இருவருக்கும் உள்ள பிரச்சனையை கேட்டறிகிறார். இவர்களை பரிகாரம் செய்ய வைத்து உருவம் அப்படியே வைத்துவிட்டு அவர்களுக்குள் இருக்கும் சிந்தனையை மாற்றிவிடுகிறார் கமல்.

அதாவது பிரபு உடம்பில் காளிதாசின் இளமையான சிந்தனை, எண்ணம், செயல் ஆகியவை இருக்குமாறும் அதேபோல், காளிதாசின் உடம்பில் பிரபுவின் பொறுப்பான சிந்தனை ஆகியவற்றை மாற்றிவிடுகிறார்.

இதன்பின் பிரபு, காளிதாஸ் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சுவாரஸ்யமாகவும் காமெடி கலந்தும் சொல்லியிருக்கிறார்கள்.

படத்திற்கு பெரிய பலம் பிரபு. முதற்பாதியில் மகன் மீது வைத்துள்ள பாசம், பொறுப்பானவராகவும் நடித்திருக்கிறார். பிற்பாதியில் இளைஞன் எண்ணத்துடன் எனர்ஜியாக நடித்திருக்கிறார். இவருடைய இளமையான நடிப்பு மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது.

முதற்பாதியில் காளிதாசின் நடிப்பு பரவாயில்லை என்றாலும், பிற்பாதியில் அதற்கு எதிர்மறையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சவேரி படம் முழுக்க வருகிறார். இவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் கமல். வீரமான பெண்ணாக நடித்திருக்கும் பூஜா குமார் நடிப்பு மிகவும் சிறப்பு. எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி ஆகியோர் அவர்களுக்கே உரிய அனுபவ நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

வித்தியாசமான கதையை தேர்வு செய்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் அமுதேஸ்வர். முதற்பாதியை விட பிற்பாதியில் அதிகம் ரசிக்கும் படி இயக்கியிருக்கிறார். சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் அழகாக வேலை வாங்கியிருக்கிறார்.

இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். லஷ்மனின் ஒளிப்பதிவில் மலேசியாவை அழகாக படம் பிடித்து காண்பித்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ சுவைக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அச்சு அசேல் அவங்கள மாதிரியே பண்ணுறாங்களே: மிஸ் பண்ணிடாதீங்க…!! வீடியோ
Next post வட்டத்துக்குள் சிக்கும் சிறகுகள்…!! கட்டுரை