By 13 November 2016 0 Comments

நீங்க எந்த ராசி! உங்க காதல் வாழ்க்கைய பத்தி இங்க தெரிஞ்சுக்கலாம்..!!

625-117-560-350-160-300-053-800-210-160-90ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உருவாகும் உணர்வு தான் காதல். பல காதலர்களின் காதல் வாழ்க்கை நன்றாக போய் கொண்டிருக்கும். ஆனால் திடீரென ஏற்படும் பிரச்சனையால் ப்ரேக் அப் ஆகி விடும். இது தனி மனித குணாதிசயத்தை பொறுத்தது!.

ஒருவர் ராசியை வைத்தே அவர் காதல் விடயத்தில் எதனால் தவறுகள் செய்கிறார், அவரின் எந்த குணம் பிரிவுக்கு காரணமாக இருக்கிறது என கணிக்க முடியும்.

மேஷம்

இவர்கள் பெரும்பாலும் விளையாட்டுதனமாக, மனகிளர்ச்சி கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லா விடயத்தையும் விரைவில் சலிப்பாக எண்ணுவார்கள். மேலும், இவர்கள் உண்மை காதலை உதாசீன படுத்த தயங்காதவர்களாக இருப்பார்கள்.

ரிஷபம்

நான், எனக்கு என சுயநலன குணம் அதிகம் கொண்ட இந்த ராசிகாரர்கள், படுக்கையறை விடயத்தில் கெட்டிகாரர்களாக செயல்படுவார்கள். ஆனால் அவர்கள் சுயநலமே காதல் ப்ரேக் அப்புக்கு முக்கிய காரணமாக அமையும்.

மிதுனம்

போதை ஏற்ற கூடிய அழகுடன் கூடிய உருவத்தில் இருக்கும் இவர்கள் எல்லா விடயத்திலும் தங்களை அடிக்கடி மாற்றி கொள்வார்கள். காதலில் ப்ரேக் அப் ஏற்பட்டாலும் பின்னர் தன் காதலன், காதலிக்கு மெசேஜ் அனுப்புவது, போன் செய்வது என தொடர்பை தொடரவே விரும்புவார்கள்.

கடகம்

நிதானமான குணம் கொண்டவர்களாக இவர்கள் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் அதிக உணர்ச்சிவசபடுவார்கள். எந்த ஒரு விடயத்திலும் சுய முடிவு எடுக்க தயங்கும் இவர்கள், எல்லாவற்றுக்கும் ஒருவரை எதிர்பார்பார்கள். இதுவே இவர்கள் காதலுக்கு பிரச்சனையாக அமையும்.

சிம்மம்

ஒரு குறிக்கோளை கொண்டு தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வரும் இவர்கள், சுறுசுறுப்பானவர்களாகவும் அதே சமயம் கோபம் வந்தால் அடுத்தவரை பொது வெளியில் கூட திட்டி விடுவார்கள். இதுவே அவர்களுக்கு பிரச்சனையாக அமையும்.

கன்னி

எல்லா விடயத்தையும் புதிய கோணத்தில் பார்க்கும் இவர்கள், அடுத்தவர்கள் மனதை சுலபமாக புண்படுத்தி விடுவார்கள். அது அவர்களுக்கு வலிக்குமே என உணரவே மாட்டார்கள்.

துலாம்

திறமைசாலிகளாக விளங்கும் இவர்களுக்கு அது தன் பிரச்சனையாகவும் அமையும், எந்த ஒரு விடயத்திலும் ஒரு இடத்தில் நிலையாக இவர்கள் இருக்க மாட்டார்கள். அதையே தான் காதல் விடயத்திலும் செய்வார்கள்.

விருச்சிகம்

அன்பு அல்லது கோபம் இரண்டையும் உடனுக்குடன் காட்டி விடும் பழக்கமுடையவர்கள் இவர்கள். கோபம் வந்தால் எதை வேண்டுமானலும் பேசி விடும் அவர்களுக்கு அது தான் காதல் பிரியவும் பிரச்சனையாக இருக்கும்.

தனுசு

நகைச்சுவைமிக்கவர்களாக இவர்கள் விளங்கினாலும், இவர்களின் சில மனகிளர்ச்சியான கொடூர விடயங்கள் இவர்கள் காதலில் பிரச்சனையை ஏற்படுத்தி பிரிவு வரை கொண்டு சென்று விடும்.

மகரம்

எல்லா விடயத்தையும் முன்னேற்பாட்டுடன் செய்யும் குணம் கொண்ட இவர்கள், காதலில் பிரச்சனை ஏற்பட்டாலும் அதை உடனே முடிக்காமல் தங்கள் காதலனையோ, காதலியையோ வேண்டுமென்றே அலைகழித்து பிரச்சனையை இழுப்பார்கள்.

கும்பம்

எல்லா விடாயங்களையும் சர்வ சாதரணமாக எடுத்து கொள்ளும் பழக்கமுடைய இவர்கள், அவர்கள் உணர்ச்சியையும், காதலையும் அடுத்தவர்களிடம் சொல்லவோ அல்லது பகிரவோ மாட்டார்கள்.

மீனம்

காதல் வருவதற்கு முன்னர், அதற்கு குழந்தைகள் போல ஏங்கும் இவர்கள் காதல் வந்த பின்னர் அதை சரியாக மதிக்காமல் தங்கள் குணத்தை மாற்றி கொண்டு விடுவார்கள்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D



Post a Comment

Protected by WP Anti Spam