ஆண்களே இதற்கு மேல் மனைவியிடம் திட்டு வாங்கினால் நாங்கள் பொறுப்பு கிடையாது…!!

Read Time:2 Minute, 54 Second

625-0-560-320-160-600-053-800-668-160-90வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் மீனை சேர்க்க வேண்டும். அதுவும் கடல் மீன்களில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களான புரோட்டீன், அயோடின், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

மார்கெட் சென்றால் வெண்டைக்காயை உடைத்துப் பார்த்து வாங்குவோம், பீட்ரூட்டை கீறிப் பார்த்து வாங்குவோம், தேங்காயை ஆட்டிப் பார்த்து வாங்குவோம்.

ஆனால், மீனை எப்படி வாங்குவது என்று நீங்கள் தெரியாமல் இருக்கலாம். சில பிரச்சினைகள் சமயலில் தான் ஆரம்பமாகும் என்பது உண்மை.

குறிப்பாக ஆண்களுக்குதான் இந்த சிக்கல். இத்தகையவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும்.

தகவல் 01

மீன் மார்கெட் சென்று மீன் வாங்கும் போது, அது பார்க்கும் போதே புதிது போல் சிறப்பாக இருந்தால், அது நல்ல மீன்.

தகவல் 02

மீனின் கண்களைப் பார்க்கும் போது, அது தெளிவாக இருந்தால், அது நல்ல மீன். ஒருவேளை அதன் கண்கள் மங்கலாக இருந்தால், அந்த மீனை வாங்காதீர்கள்.

தகவல் 03

நீங்கள் சாப்பிட ஆசைப்பட்ட மீனின் மீது ஏதேனும் காயங்கள் இருந்தால், அதை வாங்காதீர்கள்.

தகவல் 04

மீன்களின் செவுளைத் திறந்து பார்க்கும் போது, அது செந்நிறத்தில் இருந்தால் நல்ல மீன். அதுவே சாம்பல் நிறத்தில் இருந்தால், அது கெட்ட மீன்.

தகவல் 05

எந்த மீன் ருசியாக இருக்கும் என தெரிய வேண்டுமா? மீனின் மேல் செதில்கள் அதிகமாகவோ, முள் அதிகமாக இருந்தாலோ, அந்த மீன் மிகவும் ருசியாக இருக்கும்.

தகவல் 06

மீனைத் தொடும் போதே, அது நொளநொளவென்று இருந்தால், அது மீன் கெட்டுப் போயுள்ளதைக் குறிக்கும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணத்தையும், நேரத்தையும் விரயமாக்குபவர்களே!… இது உங்களுக்கான காட்சி…!! வீடியோ
Next post வெளியாகும் முன்பே விருது பெற்ற விஜய் சேதுபதி படம்…!!