நீங்கள் தோசை பிரியரா? அப்போ இதை தெரிஞ்சுகோங்க…!!

Read Time:3 Minute, 15 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90தோசை மற்றும் இட்லி ஆகிய இரண்டும் சிறந்த காலை உணவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக உள்ளது.

நாம் தினமும் சாப்பிடும் அரிசி மாவு தோசையை விட கம்பு, ராகி, கேஷ்வரகு இது போன்ற மாவுகளில் தோசை செய்து சாப்பிட்டால் நம் உடம்பிற்கு மிகவும் நல்லது.

அதிகமாக விரும்பி சாப்பிடும் தோசையை எண்ணெய் ஊற்றி சமைப்பதால் அது நம் உடம்பில் கெட்ட கொழுப்பினை சேர்க்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

எனவே தோசையை எப்படி செய்து சாப்பிட்டால் நமது உடம்பிற்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று நாம் முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நம் உடம்பின் சக்திக்கு, கார்ப்ஸ் மிகவும் அவசியம் தேவைப்படுகிறது. அந்த கார்ப்ஸ் தோசையில் உள்ளதால், எண்ணெய்யை சிறிதளவு மட்டுமே தோசையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தோசையுடன் காய்கறி அதிகம் சேர்த்த சாம்பாரை தொட்டு சாப்பிடுவதால், புரதம், விட்டமின், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் நமக்கு அதிகமாக கிடைக்கிறது.

தோசையில் எண்ணெய்யை அதிகமாக பயன்படுத்தாமல், சாப்பிட வேண்டும். ஏனெனில் அதிக எண்ணெய் சேர்க்காத தோசையில், நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளதால், இது நம் உடம்பில் உள்ள இதயத்தின் நலனை பாதுகாக்கிறது.

தோசையில், ராகி, கம்பு, சோளம் என்று இது போன்ற மாவுகளை கலந்து தோசையாக சுட்டு சாப்பிடுவதால், நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.

தோசை சுடும் போது, தோசை மாவுடன் ஒரு முட்டையை கலந்து, அதிக எண்ணெய் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டால், நமது உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கிறது.

நீரிழிவு நோய் பிரச்சனை உள்ளவர்கள் பிரச்சனை உள்ளவர்கள், அரிசி மாவு தோசைக்கு பதிலாக ராகி, கம்பு போன்ற மாவுகளில் தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எது பன்னாலும் பிளான் பண்ணி பண்ணனும் ஓகே….ஆக்டோபஸ் தந்திரம்…!! வீடியோ
Next post அச்சம் என்பது மடமையடா வெற்றிக்கு நான் காரணமல்ல: சிம்பு – வீடியோ உள்ளே..!!