மணிரத்னம் – பாலா பட நாயகிகளுடன் ஜோடி சேரும் மாதவன்-விஜய் சேதுபதி…!!

Read Time:1 Minute, 59 Second

201611161732533781_madhavan-vijay-sethupathi-movie-heroines-varalakshmi_secvpfமிர்ச்சி சிவா – எஸ்.பி.பி.சரண் நடிப்பில் வெளிவந்த ‘வ – குவார்ட்டர் கட்டிங்’ படத்தை இயக்கியவர்கள் புஷ்கர் – காயத்ரி என்ற இரட்டை இயக்குனர்கள். இவர்களுடைய இயக்கத்த்தில் தற்போது மாதவன்-விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடிக்க ‘விக்ரம் வேதா’ என்ற படம் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் இவர்களுடன் கதிர், பிரேம், ஹரீஷ் ரெபடி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஷரதா ஸ்ரீநாத் ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஷரதா ஸ்ரீநாத் சமீபத்தில் கன்னடத்தில் வெளிவந்த ‘யு டர்ன்’ படத்தின் நாயகி. தமிழில் மணிரத்னம் இயக்கும் ‘காற்று வெளியிடை’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாம், கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் இவர்தான் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.

விக்ரம் வேதா’ படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லருடன் உருவாகும் இப்படத்தின்படப்பிடிப்பு இன்றுமுதல் சென்னையில் தொடங்கியிருக்கிறது. இப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாக்கின் நுனியை அந்த இடத்தில் வைத்து அழுத்துவதால்…!அப்பறம் பாருங்க மேஜிக்கை…!!
Next post பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் மீது தாக்குதல்…!!