மீண்டும் இணையும் விஜய் – அட்லி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

Read Time:1 Minute, 59 Second

201611181222284817_vijay-atlee-again-joint-official-announcement_secvpf‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யும் அட்லியும் மீண்டும் இணையப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டு இருந்தன. ஆனால், இதுவரை தயாரிப்பாளர் தரப்பிலோ, இயக்குனர் தரப்பிலோ இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், விஜய் தற்போது நடித்துவரும் ‘பைரவா’ படத்தை தொடர்ந்த அட்லி இயக்கும் படத்தில் நடிக்கப்போவதாகவும், அந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் படம் குறித்த வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.

இப்படத்திற்கு ‘பாகுபலி’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு கதை ஆசிரியராக பணியாற்றிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதையாசிரியராக பணியாற்றுகிறார் என்று கூறப்படுகிறது. அதேபோல், இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் அதுகுறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என தெரிகிறது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பைரவா’ படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அதனையடுத்து, இப்படத்தின் பணிகளை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல்முறையாக சுதுமலையில் பிரபாகரன், மக்கள் முன் தோன்றினார்!: பல்லாயிரக் கணக்கான மக்கள், சுதுமலையில் கூடினர்!!.. (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -95) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
Next post பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான் மீது முறிந்து வீழ்ந்த மரம்…!!